மட்டன் பிரியாணி ரூ. 200; விலைப்பட்டியலை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் தங்கள் பிரச்சாரத்தின்போது வாங்கும் பொருள்களின் விலைப் பட்டியலை நிர்ணயித்துள்ளது தேர்தல் ஆணையம். அதன்படி, மட்டன் பிரியாணி ரூ. 200, சிக்கன் பிரியாணி ரூ.180.
 | 

மட்டன் பிரியாணி ரூ. 200; விலைப்பட்டியலை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் தங்கள் பிரச்சாரத்தின்போது பயன்படுத்தும் பொருள்களின் விலைப் பட்டியலை நிர்ணயித்து வெளியிட்டுள்ளது தேர்தல் ஆணையம்.

இந்தியா முழுவதும் நாடாளுமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 11-ம் தேதி முதல் மே 19-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த நிலையில், அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் பிரச்சாரத்தின்போது வாங்கும் பொருள்களுக்கு விலை நிர்ணயம் செய்துள்ளது தேர்தல் ஆணையம்.

அதன்படி, சுமார் 208 பொருள்களுக்கு விலை நிர்ணயம் செய்து பட்டியல் வெளியிட்டுள்ளது. மேலும், நாடாளுமன்றத் தேர்தலுக்கு ஒரு வேட்பாளர் 70 லட்சம் ரூபாய் வரையும், சட்டமன்றத் தேர்தல் வேட்பாளர் 28 லட்சம் ரூபாய் வரையும் செலவு செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விலைப்பட்டியல்

மட்டன் பிரியாணி - ரூ.200
சிக்கன் பிரியாணி - ரூ.180
டிபன் - ரூ.100
வெஜிடபிள் பிரியாணி - ரூ.100
மீல்ஸ் - ரூ. 100
வெஜிடபிஸ் ரைஸ் - ரூ. 50
டீ, காபி, குளிர்பானங்கள் - ரூ.75 (ஒரு லிட்டர்)
தண்ணீர் பாட்டில் - ரூ. 20 (ஒரு லிட்டர்)
இளநீர் - ரூ.40
பூசணி - ரூ.120
பட்டாசுகள் - ரூ.600 (1000 வாலா)
மேளதாளங்கள் - 4500 ( 4 மணி நேரத்துக்கு)வாழைமரம் - ரூ.700
தொழிலாளர்கள் சம்பளம் - 450 (8 மணிநேரத்துக்கு)
ஓட்டுநர் சம்பளம் - ரூ.695 (8 மணி நேரத்துக்கு)சால்வை - ரூ.150
புடவை - ரூ. 200
டி.சர்ட் - ரூ. 175
பூக்கள் - ரூ. 60
தொப்பி - ரூ. 50
பிளீச்சிங் பவுடர் - ரூ.90 (ஒரு கிலோ)
கல்யாண மண்டபம் - 2000 முதல் 6000 ரூபாய் வரை ( ஒரு நாள்)
ஏ.சி அறைகள் - ரூ. 9,300 மற்றும் வரி ( 5 ஸ்டார்)
ஏ.சி அறைகள் - ரூ. 5800 மற்றும் வரி ( 3 ஸ்டார்)
எல்.இ.டி திரைகள் - ரூ. 12,000 (ஒரு நாளுக்கு)

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP