ம.பியில் பா.ஜ.கவுக்காக வீடு வீடாக சென்று வாக்கு சேகரிக்கும் பசுமாடு!

சத்தீஸ்கர் தவிர மற்ற மாநிலங்களில் தேர்தல் பிரச்சாரங்கள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், மத்திய பிரதேச மாநில தேர்தல் பிரச்சாரத்தில் பா.ஜ.க-க்காக பசு ஒன்று களமிறங்கியுள்ளது. இது அம்மாநிலத்தில் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்து வருகிறது.
 | 

ம.பியில் பா.ஜ.கவுக்காக வீடு வீடாக சென்று வாக்கு சேகரிக்கும் பசுமாடு!

மத்திய பிரதேச மாநில தேர்தல் பிரச்சாரத்தில் பா.ஜ.வுக்காக பசு ஒன்று களமிறங்கியுள்ளது. இது அம்மாநிலத்தில் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்து வருகிறது.

சத்தீஸ்கர், ராஜஸ்தான், மத்திய பிரதசேம், தெலங்கானா, மிசோரம் ஆகிய 5  மாநிலங்களுக்கும் சட்டப்பேரவை தேர்தலை சமீபத்தில் தேர்தல் ஆணையம் அறிவித்தது.

முதலாவதாக சத்தீஸ்கர் மாநிலத்தில் இன்று முதல்கட்ட சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்த சூழ்நிலையில், மற்ற மாநிலங்களிலும் அடுத்தடுத்து தேர்தல் நடைபெற உள்ளன. மத்தியபிரதேசம் மற்றும் மிசோரம் மாநிலத்திற்கு வருகிற நவம்பர்  28ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற இருக்கிறது.  அதேபோன்று ராஜஸ்தான், தெலங்கானா மாநிலங்களில் டிசம்பர் 7ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. 

இதனால் சத்தீஸ்கர் தவிர மற்ற மாநிலங்களில் தேர்தல் பிரச்சாரங்கள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், மத்திய பிரதேச மாநிலத்தில் பசு ஒன்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளது. பசுவின் உடலில் பாஜகவின் கொடி வரையப்பட்டு தேர்தல் பிரச்சாரத்தின் போது பசு  கூட்டிச் செல்லப்படுகிறது. அம்மாநிலத்தில் வீடு வீடாக சென்று இந்தப்பசு வாக்கு சேகரித்து வருகிறது.

இதுகுறித்து, பா.ஜ.க உறுப்பினர் டாக்டர் ஆனந்த் ராய், "மத்திய பிரதேச தேர்தல் பிரச்சாரத்தில் பா.ஜ.வுக்காக பசு களமிறங்கியுள்ளது. மாநிலத்தில்  பாஜகவின் தேர்தல் பிரச்சாரத்தில் இது முக்கியப்பங்கு வகிக்கும்" என தெரிவித்தார். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP