ஒடிசாவில் மாவோயிஸ்ட் சுட்டுக்கொலை!

ஒடிசாவில் மாவோயிஸ்டுகளுக்கும், சிறப்பு பாதுகாப்பு படையினருக்கும் இடையே நடந்த துப்பாக்கிச்சண்டையில் மாவோயிஸ்ட் ஒருவன் சுட்டுக்கொல்லப்பட்டான்.
 | 

ஒடிசாவில் மாவோயிஸ்ட் சுட்டுக்கொலை!

ஒடிசாவில் மாவோயிஸ்டுகளுக்கும், சிறப்பு பாதுகாப்பு படையினருக்கும் இடையே நடந்த துப்பாக்கிச்சண்டையில் மாவோயிஸ்ட் ஒருவன் சுட்டுக்கொல்லப்பட்டான். 

ஒடிசா மாநிலத்தின் கலஹன்டி மாவட்டம், கோட்பன்டெல்(Kotbunde) என்ற பகுதியில் மாவோயிஸ்ட்டுகள் பதுங்கியுள்ளதாக அம்மாநில சிறப்பு படையினருக்கு தகவல் வந்தது. இதையடுத்து, அப்பகுதியை அடைந்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். 

தொடர்ந்து, மாவோயிஸ்ட்டுகளுக்கும், சிறப்பு படையினருக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச்சண்டையில் மாவோயிஸ்ட் ஒருவன் சுட்டுக்கொல்லப்பட்டான். அவனிடமிருந்து ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டன. தொடர்ந்து மாவோயிஸ்டுகளை  தேடும் பணியில் சிறப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP