மகுடம் சூடா மன்னர் மனோகர் பரிக்கர்: சிலாகிக்கும் நிதின் கோகலே! பகுதி-2

மறைந்த கோவா முதல்வரும், முன்னாள் பாதுகாப்புத்துறை அமைச்சருமான மனோகர் பரிக்கர் குறித்து அவரின் நெருங்கிய நண்பரும், பத்திரிகையாளருமான நிதின் கோகலே எழுதியது: -
 | 

மகுடம் சூடா மன்னர்  மனோகர் பரிக்கர்: சிலாகிக்கும் நிதின் கோகலே!  பகுதி-2

மறைந்த கோவா முதல்வரும், முன்னாள் பாதுகாப்புத்துறை அமைச்சருமான மனோகர் பரிக்கர் குறித்து அவரின் நெருங்கிய நண்பரும், பத்திரிகையாளருமான நிதின் கோகலே எழுதியது: -

பகுதி -2

சில வாரங்கள் கடந்தன. அதுவரை நாங்கள் அடிக்கடி சந்தித்து இருந்தோம். ஆனால், அவர்கள் எப்போது அழைக்கிறாரோ அப்போது மட்டுமே நான் அவரை சென்று சந்தித்தேன். ஆனால், தினமும் போனில் மட்டும் அழைப்பு வந்துவிடும். புதிதாக ஏதும் தகவல்கள் குறித்து என்னிடம் கேட்பார். நானும் எனது அறிவுக்கு எட்டிபடியான விஷயங்களை அவரிடம் கூறுவேன். 

ஒரு நாள் அவர், பாதுகாப்புத் துறையில் உள்ள பாலிசிகளை மாற்ற வேண்டும் என்று விரும்பி என்னிடம் கூறினார். 'எனக்கு சில பெயர்களை பரிந்துரைக்க வேண்டும்' என்று என்னிடம் கூறினார்.  நான் அவருக்கு ஆறு நபர்களின் பெயரை பரிந்துரை செய்தேன். அதிலிருந்து அவர், நான்கு பேரை தேர்ந்தெடுத்து ஒரு கமிட்டியை உருவாக்கினார். இது 2014ம் ஆண்டு நடந்தது. 

இந்த குழு பாதுகாப்புத் துறையில் பல்வேறு முக்கியமான பரிந்துரைகளை முன்வைத்தது. இவை அனைத்தும் வெளிப்படையாகவே நடந்தன. பாதுகாப்புத் துறையில் உள்நாட்டு தயாரிப்புக்கு முக்கியத்துவம் அளிக்கும் விதத்தில் கொள்கைகளை உருவாக்கினார்.  அது, பாதுகாப்பு துறையில் உள்ள வெளிப்படைத் தன்மையை அதிகரிக்கும் என்றும் அவர் நம்பினார்.

மகுடம் சூடா மன்னர்  மனோகர் பரிக்கர்: சிலாகிக்கும் நிதின் கோகலே!  பகுதி-2

சில மாதங்கள் கழித்து அவர் வீட்டிற்கு வரும்படி எனக்கு அழைப்பு வந்தது. டெல்லி அக்பர் சாலையில் இருந்தது அவரது இல்லம். சில நேரங்களில் காலை 7 மணிக்கு வரச்சொல்வார். சில நேரங்களில் இரவு 10 மணிக்கு மேல். எங்களுக்கு 'பைரா' என்ற பீர் மிகவும் பிடித்தமான ஒன்று. எங்களது பேச்சுவார்த்தை அது இல்லாமல் இருக்காது. அவருக்கு என்ன தோன்றுகிறதோ பேசுவார். 

நான் ஒரு 40 நாட்கள் அமெரிக்காவுக்கு ஒரு ஆராய்ச்சிக்காக சென்ற போது கூட, அவரது உதவியாளரின் போனில் இருந்து என்னை வாட்ஸ்ஆப்பில்  அழைத்தார். 

டெல்லியின் முகஸ்துதி அவருக்கு பிடிக்கவில்லை. அவரது பங்களாவின் கதவுகள் திறந்தே இருக்கும். ஆனால், பணத்திற்கும் செல்வாக்கிற்கும் அல்ல. 

நான் பாதுகாப்புத்துறை அமைச்சருடன் நெருக்கமாக இருக்கிறேன் என்று வெளியில் செய்தி பரவ ஆரம்பித்தது. இதனால் நான் சில நபர்களை (நம்பர்களை) பிளாக் செய்ய வேண்டியிருந்தது. இதுபற்றி அவரிடம் கூறும் போது, 'நல்லது' என்று மட்டும் கூறினார். 

மகுடம் சூடா மன்னர்  மனோகர் பரிக்கர்: சிலாகிக்கும் நிதின் கோகலே!  பகுதி-2

நவம்பர் 2015ல் நான் பாரத் சக்தி என்ற இணையதளத்தை ஆரம்பித்தேன். அதற்காக அவரிடம் ஒரு நீண்ட நேர்காணல் வேண்டும் என்று கேட்டேன். அவர் அந்த நேரத்தில் படு பிசியாக இருந்ததால் நேரம் ஒதுக்க முடியவில்லை. அப்போது அவர், கோவாவிற்கு வரும்படி கூறினார். 'நாம் இருவரும் விமானத்தில் செல்வோம். 2 மணி நேரம் இருக்கிறது. நநீங்கள் என்ன கேட்க வேண்டுமோ கேளுங்கள்' என்றார்.

அதுபடியே, கோவாவில் இருந்து டெல்லி சென்ற அந்த 2 மணி நேரத்தில் நடந்த அந்த நேர்காணல் என் வாழ்வில் மறக்க முடியாதது. அவர் எந்த குறிப்பையும் வைத்துகொள்ளவில்லை. அனைத்து புள்ளி விபரங்களையும் எதன் உதவியும் இன்றி கூறினார். அது எனக்கு ஆச்சரியமாகவும் இருந்தது. 

பரிக்கர் மிகவும் தீவிரமான ஒரு புத்தக வாசிப்பாளர். ஒரு நாள் நான் அமெரிக்காவில் இருந்து திரும்பி வந்தவுடன் அவரை சந்தித்தேன். என்னிடம் ஒரு புத்தகத்தை கொடுத்து படிக்க சொன்னார். 'இதை படித்துவிட்டு உங்களுடைய கருத்தை கூறுங்கள்' என்றார். அது அமெரிக்காவில் நடந்த பல்வேறு போர்களில் அந்நாட்டின் வெற்றி மற்றும் தோல்விகள் குறித்து இருந்தது.

மகுடம் சூடா மன்னர்  மனோகர் பரிக்கர்: சிலாகிக்கும் நிதின் கோகலே!  பகுதி-2

இதிலிருந்து, இந்தியாவில் என்ன மாற்றத்தை கொண்டு வரலாம் என்று பாருங்கள். முப்படைகளையும் இணைக்க வேண்டும். அவற்றை ஒருவரின் கீழ் இயக்க வேண்டும் என்று கூறினார்.

அதற்கடுத்த நாள் ராபர்ட் கிரீன் சீன் 'போர்களுக்கான 33 கொள்கைகள்' என்று புத்தகத்தை கொடுத்து படிக்கச் சொன்னார். இந்த புத்தகத்தில் இருந்து எனக்கு நிறைய யோசனைகள் உதித்துள்ளன என்றார்.

அவர் கொடுத்த அந்த இரண்டு புத்தகங்களும் இன்றும் என்னுடன் இருக்கின்றன. அவர், அந்த பங்களாவை விட்டு செல்லும் போது கூட அந்த புத்தகங்கள் அனைத்தையும் கோவா சதனுக்கு கொடுக்கும்படி கூறினார்.  அதில், உங்களுக்கு  எந்த புத்தகங்கள் வேண்டுமோ எடுத்துக்கொள்ளுங்கள் என்றார். அவர் கூறியபடியே நானும், 60 முதல் 65 புத்தகங்களை எடுத்துக் கொண்டேன். அந்த புத்தகங்கள் இன்றும் அவரை நினைவு கூர்கின்றன. 

தொடர்ச்சி 3ம் பாகத்தில்... 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP