மகுடம் சூடா மன்னர் மனோகர் பரிக்கர் :சிலாகிக்கும் நிதின் கோகலே! பகுதி-3

மறைந்த கோவா முதல்வரும், முன்னாள் பாதுகாப்புத்துறை அமைச்சருமான மனோகர் பரிக்கர் குறித்து அவரின் நெருங்கிய நண்பரும், பத்திரிகையாளருமான நிதின் கோகலே எழுதியது: -
 | 

மகுடம் சூடா மன்னர் மனோகர் பரிக்கர் :சிலாகிக்கும் நிதின் கோகலே!  பகுதி-3

மறைந்த கோவா முதல்வரும், முன்னாள் பாதுகாப்புத்துறை அமைச்சருமான மனோகர் பரிக்கர் குறித்து அவரின் நெருங்கிய நண்பரும், பத்திரிகையாளருமான நிதின் கோகலே எழுதியது: -

பகுதி -3

ஐ.ஐ.டி., மும்பையில் இருந்த ஒருவர், திடீரென அரசியலுக்கு சென்ற அவரது  பயணம், எனக்கு ஆர்வமாகவே இருந்தது. இது குறித்து அவர், இயற்கையாக அமைந்த ஒரு நிகழ்வு என்று கூறுகிறார். மக்களுக்கான பணியில் ஈடுபடும் போது, அதற்கு நம்மை தயார்படுத்திக்கொள்ள வேண்டும். அது அவரிடம் இயல்பாகவே இருந்தது என்று கூறலாம். மிகவும் அன்பானவர், அனைவரையும் மரியாதையாக நடத்த கூடியவராக இருந்தார்.  அதே நேரத்தில், தனிப்பட்ட முறையில் அவரிடம் சில தவறுகளும் இருந்தன. அது என்னவென்றால், எல்லா விஷயத்திலும் கச்சிதமாகவும், நேர்த்தியாகவும் (perfectionist) இருந்தது தான். 

அவர் எப்போதும் தன்னுடைய வேலையை தானே செய்ய வேண்டும் என்று விரும்புவார். சில நேரத்தில், எந்த ஆடம்பரமும் இல்லாமல் ஒரு சாதாரண மனிதராக காட்சியளிப்பார். 

மகுடம் சூடா மன்னர் மனோகர் பரிக்கர் :சிலாகிக்கும் நிதின் கோகலே!  பகுதி-3

அவருக்கு பாதுகாப்பு துறையில் தொடர்ந்து பணிகள் அதிகமாக இருந்தது. இரவு 11 மணி வரை வேலை செய்வார்; அதிகாலை 4 மணிக்கு எழுந்து விடுவார். ஐந்து நாட்கள் டெல்லியிலும், இரண்டு நாட்கள் கோவாவிலும் என வாரத்தின் ஏழு நாட்களும் பணியில் ஈடுபட்டு இருப்பார். ஒரே நேரத்தில் பாதுகாப்புத்துறையையும், கோவாவையும் பார்த்துக்கொண்டார். 

அவர் டெல்லியில் இருக்கும் போது, தன்னுடைய சாதாரண வாழ்க்கையை இழந்ததாகவே கருதினார். ஒரு பாதுகாப்பு அமைச்சராக பெரும்பாலான நேரங்களில் அவர் சற்று ஆடம்பரத்துடன் இருக்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டார். ஆனால், அவர் வேலை முடிந்து ஓய்வு நேரங்களில் இருக்கும்போது அதற்கு எதிர்மறையாக மிகவும் சாதரணமாக மாறி விடுவார்.

திடீரென்று என்னை போனில் அழைத்து, டெல்லியில் இருக்கிறீர்களா? என்று கேட்பார். அப்படி ஒருவேளை நான் டெல்லியில் இருந்துவிட்டால், அடுத்த ஒரு மணி நேரத்தில் அவர் எங்கள் வீட்டில் இருப்பார். அவர், "நான் இப்போது உங்கள் வீட்டிற்கு வருகிறேன். உங்களது மனைவியை சாதாரணமாக கொஞ்சம் சாதம் மற்றும் மீன் கறி மட்டும் செய்து வைக்கச் சொல்லுங்கள்" என்று கூறுவார். கூறியபடியே அடுத்த ஒரு மணி நேரத்தில் வந்துவிடுவார். தன் மீது உள்ள அனைத்து சுமைகளையும் இறக்கி வைத்துவிட்டு சற்று இளைப்பாறும் நேரம் தான் அது. குடும்ப ரீதியாகவும் நாங்கள் இருவரும் மிகுந்த நெருக்கம் ஆனோம். எங்களது இரு குடும்பத்தினரும் நல்ல ஒரு நட்புறவோடு இருந்தனர்.

மகுடம் சூடா மன்னர் மனோகர் பரிக்கர் :சிலாகிக்கும் நிதின் கோகலே!  பகுதி-3

எனக்கு இப்போதுதான் ஒன்று தோன்றுகிறது... அவர் எனது வீட்டிற்கு வந்த போதும் சரி, நான் அவரை சந்திக்க செல்லும்போதும் சரி, நாங்கள் ஒருமுறை கூட புகைப்படம் எடுத்துக் கொள்ளவில்லை என்று. பொது இடங்களில் மட்டுமே நாங்கள் இருவரும் இருப்பது போன்ற புகைப்படங்கள் உள்ளன. ஆனால், அவர் என்னுடைய மனதில் எப்போதும் இருப்பார். 

உண்மையில் இதையெல்லாம் எழுதும் போது என்னையறியாமல் எனது கண்களில் இருந்து கண்ணீர் வழிகிறது. அந்த தருணத்தில் ஆயிரம் ஆயிரம் நினைவுகள் என் மனதில் வந்து செல்கிறது. என் வாழ்க்கையில் மிகவும் எமோஷனல் ஆன ஒரு நேரமாக இதை நான் கருதுகிறேன். இப்போது மட்டுமல்ல, இன்னும் சில மாதங்கள், சில வருடங்கள் ஆனாலும், பரிக்கரை நினைக்கும் போது இப்படி தான் உணர்ச்சிவசப்படுவேன். அவர் என்னுடன் கலந்திருக்கிறார் அவர் எனக்கு ஒரு மூத்த சகோதரனைப் போல இருந்துள்ளார்

மகுடம் சூடா மன்னர் மனோகர் பரிக்கர் :சிலாகிக்கும் நிதின் கோகலே!  பகுதி-3

எனது நண்பரே, நீங்கள் வெகு விரைவில் என்னை விட்டு சென்று விட்டீர்கள். பாதுகாப்பாக செல்லுங்கள். நீங்கள் என் வாழ்க்கையில் ஒரு எடுத்துக்காட்டாக இருந்துள்ளீர்கள். உங்களிடமிருந்து நான் நிறைய கற்றுக்கொண்டேன். அதில், முக்கியமானது எளிமை. நாம் எந்த ஒரு உயரத்திற்கு சென்றாலும் எளிமையை விட்டுவிடக் கூடாது என்பதே நீங்கள் எனக்கு கற்றுத் தந்த மிகப்பெரிய பாடம். எளிமையின் சிகரமாய் வாழ்ந்து மறைந்த நீங்கள் நிச்சயம் ஓர் மகுடம் சூடா மன்னர் தான்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP