மனோகர் பரிக்கர் ஈடுஇணை அற்ற ஒரு தலைவர்: நினைவு கூறும் பிரதமர் மோடி

கோவா மாநில முதல்வர் மனோகர் பரிக்கர் மறைவிற்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், பரிக்கர் நாட்டிற்கு ஆற்றிய பல்வேறு சேவைகளையும் இத்தருணத்தில் நினைவு கூர்ந்துள்ளார்.
 | 

மனோகர் பரிக்கர் ஈடுஇணை அற்ற ஒரு தலைவர்: நினைவு கூறும் பிரதமர் மோடி

கோவா மாநில முதல்வர் மனோகர் பரிக்கர் மறைவிற்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், பரிக்கர் நாட்டிற்கு ஆற்றிய பல்வேறு சேவைகளையும் இத்தருணத்தில் நினைவு கூர்ந்துள்ளார்.

கோவா மாநில முதல்வரும், மத்திய முன்னாள் பாதுகாப்புத்துறை அமைச்சருமான மனோகர் பரிக்கர்(63), கணையப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நிலையில், கடந்த ஒரு ஆண்டாக சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சைக்காக, அவர் அவ்வப்போது அமெரிக்காவும் சென்று வந்தார்.

இந்நிலையில், நேற்று பிற்பகல் அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், மாலை 6.15 மணிக்கு, அவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்ததார். அவரது மறைவுக்கு குடியரசுத் தலைவர், பிரதமர் உள்பட அனைத்து அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். 

பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், "மனோகர் பாரிக்கர் ஈடுஇணை அற்ற ஒரு தலைவர். உண்மையான தேசபக்தி கொண்டவர். சிறந்த நிர்வாகத் திறன் பெற்றவர். அனைவராலும் கவரப்பட்டவர். அவர் இந்நாட்டுக்கு செய்த சேவைகள் தலைமுறைக்கும்  நினைவு கூறப்படும். அவரது மிகவும் வருத்தம் அளிக்கிறது. அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், ஆதரவாளர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்கள்" எனக் கூறிப்பிட்டுள்ளார். 

மற்றொரு பதிவில், "நவீன கோவாவைக் கட்டமைத்த பெருமை பரிக்கரையேச் சாரும். எளிமையாக, அனைவரோடும் எளிதாக நட்பு பாராட்டும் அவரது குணம் மற்றும் ஆளுமை மூலமாக, அவர் கோவா மக்களின் மனதில் என்றும் நிலைத்திருப்பார். கோவா மக்களின் விருப்பமான தலைவர். மக்களின் நலனை கொள்கைகளாக  வைத்து, அவர் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியதன் மூலம் கோவா நல்ல வளர்ச்சியை பெற்றுள்ளது" என்று குறிப்பிட்டுள்ளார். 

மேலும், "மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சராக மனோகர் பாரிக்கர் ஆற்றிய பணிக்கு இந்தியா நன்றிக்கடன்பட்டுள்ளது. அவர் பாதுகாப்புத்துறை அமைச்சராக பணியாற்றிய காலகட்டத்தில், இந்தியாவின் பாதுகாப்பு தொடர்பாக பல்வேறு முக்கிய முடிவுகளை எடுத்து செயல்படுத்தியது, உள்நாட்டு ராணுவப் தளவாடங்கள் தயாரிப்பை ஊக்குவித்தது, முன்னாள் ராணுவ வீரர்களின் வாழ்க்கையை மேம்படுத்தியது என்ற பெருமைகள் அவரையேச் சாரும்" என புகழாரம் சூட்டியுள்ளார். 

 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP