5 ஆண்டுகளை வெற்றிகரமாக நிறைவு செய்த மங்கள்யான்!

செவ்வாய் கிரகத்தை ஆராய்ச்சி செய்வதற்காக விண்ணில் செலுத்தப்பட்ட மங்கள்யான் விண்கலம் வெற்றிகரமாக 5 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.
 | 

5 ஆண்டுகளை வெற்றிகரமாக நிறைவு செய்த மங்கள்யான்!

செவ்வாய் கிரகத்தை ஆராய்ச்சி செய்வதற்காக விண்ணில் செலுத்தப்பட்ட மங்கள்யான் விண்கலம் வெற்றிகரமாக 5 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. 

சிவப்பு கிரகம் என அழைக்கப்படும் செவ்வாய் கிரகத்தை ஆராய்ச்சி செய்வதற்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ மங்கள்யான் விண்கலத்தை அறிமுகப்படுத்தியது. 2013 ஆம் ஆண்டு நவம்பர் 5 ஆம் தேதி மங்கள்யான் விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. 2014 ஆம் ஆண்டு செப்டம்பர் 24 ஆம் தேதி முதல் செவ்வாய் கிரகத்தின் சுற்றுவட்டப்பாதையில் தனது பயணத்தை தொடங்கியது.

5 ஆண்டுகளை வெற்றிகரமாக நிறைவு செய்த மங்கள்யான்! 

எந்தவித தடையும் இல்லாமல் நீண்ட காலத்திற்கு தன்னை தானே இயக்கி கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த மங்கள்யான், செவ்வாய்கிரகத்தின் அமைப்பு, பல்வேறு இடங்கள், அடிக்கடி நிகழும் புயல்கள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளை புகைப்படம் எடுத்து அனுப்பி வருகிறது. செவ்வாய் கிரகத்தின் சுற்றுப்பாதையில் ஒரே முயற்சியில் நுழைந்த முதல் நாடு என்ற பெருமையை பெற்று தந்த மங்கள்யான் விண்கலம் வெற்றிகரமாக 5 ஆண்டுகளை கடந்து மேலும் பெருமை சேர்த்துள்ளது. 

5 ஆண்டுகளை வெற்றிகரமாக நிறைவு செய்த மங்கள்யான்!

இது குறித்து இஸ்ரோ தலைவர் சிவன் கூறுகையில், "6 மாதம் மட்டுமே திட்டமிடப்பட்ட மங்கள் யான் விண்கலத்தின் பயணம் வெற்றிகரமாக 5 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. மங்கள்யான் அனுப்பிய புகைப்படங்களின் மூலம் உலக வரைப்படம் போல் செவ்வாய் கிரக வரைப்படங்களை இஸ்ரோ உருவாக்கியுள்ளது" என  தெரிவித்தார். 

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP