பிரதமரின் கூட்டத்தில் குண்டுவெடிக்கும் என மிரட்டல் விடுத்தவர் கைது

பீகாரில் வரும் 3ம் தேதி தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. அதில் பிரதமர் மோடி கலந்துகொள்கிறார். அங்கு குண்டுவெடிப்பு நடத்தப்படும் என்று மிரட்டல் விடுத்த நபரை காவல்துறை கைது செய்துள்ளது.
 | 

பிரதமரின் கூட்டத்தில் குண்டுவெடிக்கும் என மிரட்டல் விடுத்தவர் கைது

பீகார் மாநிலத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கும் பொதுக்கூட்டத்தில் குண்டுவெடிப்பு நடத்தப்படும் என்று வாட்ஸ் அஃப் மூலமாக மிரட்டல் விடுத்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

வரும் 3ம் தேதி பீகாரில் பிரதமர் மோடி பங்கேற்கும் கூட்டம் நடைபெறவுள்ளது. இந்நிலையில், சமூக ஆர்வலர் என்ற போர்வையில் வலம் வரும் நபரான உதயன் ராய் என்ற நபர் சார்பில் வாட்ஸ் அஃபில் ஓர் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. அதில், பிரதமரின் கூட்டத்தில் குண்டுவெடிப்பு நடைபெறும் என்று அவர் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இதுகுறித்த புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், உதயன் ராயை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவரை 14 நாள்கள் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். முன்னதாக, தீவிரவாதத் தடுப்பு காவல்துறை பிரிவினர், உளவு அமைப்பினர் உள்ளிட்டோர் அவரிடம் விசாரணை நடத்தினர். நாடாளுமன்றத் தேர்தல் நெருங்குவதையொட்டி, பீகாரில் வரும் 3ம் தேதி தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. அதில் பிரதமர் மோடி கலந்துகொள்கிறார்.

newstm.in
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP