மம்தாவின் ஆட்சி விரைவில் முடிவுக்கு வரும்: ஜே.பி.நட்டா

மேற்கு வங்க மாநிலத்தில் மம்தா பானர்ஜியின் ஆட்சி விரைவில் முடிவுக்கு வரும் என்று பாஜக செயல் தலைவர் ஜே.பி. நட்டா தெரிவித்துள்ளார்
 | 

மம்தாவின் ஆட்சி விரைவில் முடிவுக்கு வரும்: ஜே.பி.நட்டா

மேற்கு வங்க மாநிலத்தில் மம்தா பானர்ஜியின் ஆட்சி விரைவில் முடிவுக்கு வரும் என்று பாஜக செயல் தலைவர் ஜே.பி. நட்டா தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய பாஜக செயல் தலைவர் ஜே.பி. நட்டா, "காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370 பிரிவை ரத்து செய்யப்பட்டதற்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். வாக்கு வங்கிக்காக மட்டுமே அவர் தனது எதிர்ப்பை பதிவு செய்துள்ளார்.

நாட்டின் நலன் மீது அக்கறை கொண்டிருந்தால் இவ்வாறு தெரிவித்து இருக்க மாட்டார். மேற்கு வங்க மாநிலத்தில் அவரது ஆட்சியின் நாட்கள் எண்ணப்பட்டு வருகிறது. விரைவில் மம்தாவின் ஆட்சி மேற்கு வங்கத்தில் முடிவுக்கு வரும்" என்று பேசியுள்ளார். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP