பிரதமர் மோடியை சந்திக்கவிருக்கும் மம்தா பானர்ஜி!

மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி நாளை மறுநாள் டெல்லியில் பிரதமர் மோடியை சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
 | 

பிரதமர் மோடியை சந்திக்கவிருக்கும் மம்தா பானர்ஜி!

மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி நாளை மறுநாள் டெல்லியில் பிரதமர் மோடியை சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

நடந்து முடிந்த நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் மேற்கு வங்க மாநிலத்தில் பாஜக முதல்முறையாக அதிக தொகுதிகளை கைப்பற்றி திரிணாமூல் காங்கிரஸ் கட்சிக்கு போட்டியாக மாறியுள்ளது.

இதற்கிடையே, திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கும், பாஜகவுக்கும் இடையே கடுமையான மோதல் இருந்து வருகிறது. பாஜகவின் பல்வேறு நடவடிக்கைகளை மம்தா பானர்ஜி விமர்சித்து வருகிறார்.

சாரதா நிதி நிறுவன மோசடி தொடர்பாக கொல்கத்தா முன்னாள் போலீஸ் கமிஷனர் ராஜீவ் சுற்றுலாவுக்கு எதிராக சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விஷயத்தில் மம்தா பானர்ஜி பிரதமர் மோடியையும், பாஜகவையும் கடுமையாக விமர்சித்தார். ராஜீவ் சுக்லாவை சிபிஐ போலீசார்  தேடி வரும் நிலையில், அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரதமர் மோடியை மம்தா பானர்ஜி நாளை மறுநாள் சந்திக்க இருப்பதாக மேற்குவங்க மாநில தலைமைச் செயலகம் தகவல் தெரிவித்துள்ளது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP