மகாராஷ்டிரா: கடத்தல் மற்றும் பணம் பறிப்பு வழக்கில் எஸ்.பிக்கு ஆயுள் தண்டனை!

மகாராஷ்டிராவில் கடத்தல் மற்றும் பணம் பறிப்பது தொடர்பான வழக்கில் அம்மாநில எஸ்.பி ரேங்க் அதிகாரி ஒருவருக்கு அங்குள்ள மாவட்ட நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.
 | 

மகாராஷ்டிரா: கடத்தல் மற்றும் பணம் பறிப்பு வழக்கில் எஸ்.பிக்கு ஆயுள் தண்டனை!

மகாராஷ்டிராவில் கடத்தல் மற்றும் பணம் பறிப்பது தொடர்பான வழக்கில் அம்மாநில எஸ்.பி கிரேடு அதிகாரி ஒருவருக்கு அங்குள்ள மாவட்ட நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது. 

மகாராஷ்டிரா மாநிலம் ஜல்கான் மாவட்ட நீதிமன்றத்தில் நேற்று ஒரு வழக்கு விசாரணைக்கு வந்தது. 2009ம் ஆண்டு நடந்த கடத்தல் மற்றும் பணப்பறிப்பு சம்மந்தமான இந்த வழக்கில் இரு நபர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்கி மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதுதவிர இருவருக்கும் தலா 5,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

ஒருவர் மனோஜ் லோஹர், இவர் தற்போது ஊர்க்காவல் துறை(Home Guard Department) மூத்த அதிகாரியாக இருக்கிறார். எஸ்.பி கிரேடு பதவியில் இருக்கும் இவரும், இவரது உறவினருமான தீராஜ் எவ்லேவும் இணைந்து பணம் பறிப்பு வேலையில் ஈடுபட்டுள்ளனர். 

மனோஜ் கடந்த 2009ம் ஆண்டு ஜால்கான் மாவட்டத்திற்கு கூடுதல் எஸ்.பியாக இருந்துள்ளார். அந்த சமயத்தில் தான் சிலரிடம் வலுக்கட்டாயமாக பணம் மற்றும் சொத்துக்களையே பறித்துள்ளார். ஐவரும் இவரது உறவினர்  தீராஜ் எவ்லேவும் இணைந்து மகாஜன் என்பவரை கடத்தி, மிரட்டி ரூ.25 லட்சம் வரை பெற்றுள்ளனர். பணம் கிடைத்ததும் மஹாஜனை மிரட்டி வெளியே விட்டுள்ளனர். 

இந்த வழக்கு தொடர்பாக தான் தற்போது இருவருக்கும் ஆயுள் தண்டனை கிடைத்துள்ளது.

newstm.im

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP