மகாராஷ்டிரா: மீட்பு படகு கவிழ்ந்து விபத்து; 9 பேர் பலி!

மகாராஷ்டிர மாநிலத்தில் படகு கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதில் 9 பேர் பலியாகினர். மேலும், காணாமல் போன பலரை தேடும் பணி நடைபெற்று வருகிறது.
 | 

மகாராஷ்டிரா: மீட்பு படகு கவிழ்ந்து விபத்து; 9 பேர் பலி!

மகாராஷ்டிர மாநிலத்தில் படகு கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதில் 9 பேர் பலியாகினர். மேலும், காணாமல் போன பலரை தேடும் பணி நடைபெற்று வருகிறது. 

மகாராஷ்டிர மாநிலத்தில் பெய்து வரும் தொடர் கனமழையால் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள சாங்லி மாவட்டத்தில் கிருஷ்ணா நதிக்கரையோரத்தில் வெள்ளத்தில் சிக்கிய மக்களை மீட்க சென்ற படகு ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. படகில் இருந்தவர்கள் தண்ணீருக்குள் விழுந்து தத்தளித்தனர்.

அவர்களில் 9 பேர் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளனர். 15 பேர் நீச்சல் தெரிந்ததால் நீந்தி கரையை அடைந்தனர். மேலும் காணாமல் போன பலரை தேடும் பணி நடைபெற்று வருகிறது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP