மகாராஷ்டிரா: புதிய எம்எல்ஏக்கள் பதவியேற்பு!

மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்ற புதிய எம்எல்ஏக்கள் பதவியேற்று வருகின்றனர்.
 | 

மகாராஷ்டிரா: புதிய எம்எல்ஏக்கள் பதவியேற்பு!

சிறப்பு சட்டமன்றக் கூட்டத் தொடரில் மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்ற புதிய எம்எல்ஏக்கள் பதவியேற்று வருகின்றனர். 

மகாராஷ்டிராவில் கடந்த அக் 21ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. அக்.24 ஆம் தேதில் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், கூட்டணி அமைப்பதில் ஏற்பட்ட பிரச்சனையால் பதவியேற்பு நிகழ்ச்சிகள் நடைபெறவில்லை. இந்நிலையில், பாஜக ஆட்சியமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து சிவசேனா கூட்டணியினர் தொடர்ந்த வழக்கில், நேற்றைய தினம் இடைக்கால சபாநாயகரை நியமிக்கும் படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி மகாராஷ்டிரா சட்டப்பேரவையின் இடைக்கால சபாநாயகராக காளிதாஸ் கோலம்ப்கர் நியமனம் செய்யப்பட்டார். 

இதை தொடர்ந்து, இன்று மகாராஷ்டிரா சிறப்பு சட்டமன்றக் கூட்டத் தொடரில் புதிய எம்எல்ஏக்கள் பதவியேற்று வருகின்றனர். இடைக்கால சபாநாயகர் காளிதாஸ் கோலம்ப்கர் பதவிப்பிரமாணம் செய்து வைத்து வருகிறார். பாஜகவை சேர்ந்த 105 எம்எல்ஏக்கள், சிவசேனாவை சேர்ந்த 56 எம்எல்ஏக்கள், தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 44 எம்எல்ஏக்கள் உட்பட 288 எம்எல்ஏக்கள் பதவியேற்கவுள்ளனர். 

Newstm.in 

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP