மகாராஷ்டிரா : அமைச்சரவை கூட்டம் இல்லாமல் எவ்வாறு திரும்ப பெறப்பட்டது குடியரசுத் தலைவர் ஆட்சி ??

மகாராஷ்டிரா மாநிலத்தில், பாஜக தலைவர் தேவேந்திர ஃபட்னாவிஸின் பதவியேற்பை ஏற்று குடியரசுத் தலைவரது ஆட்சி திரும்ப பெறப்பட்டு மாநில ஆட்சி அமைக்கப்பட்டதை தொடர்ந்து, அமைச்சரவை கூட்டம் இல்லாமல் எவ்வாறு குடியரசுத் தலைவரது ஆட்சி திரும்ப பெறப்படலாம் என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.
 | 

குடியரசுத் தலைவரது கட்டுப்பாட்டில் இருந்த மகாராஷ்டிரா மாநிலம்,  நேற்று காலை முதல் பாஜவின் கட்டுப்பாட்டிற்குள் மாநில ஆட்சி தலைமையில் வந்துள்ளது. அமைச்சரவை கூட்டம் இல்லாமல் இது எப்படி சாத்தியமாகும் என்றால், பிரதமருக்கு உள்ள சிறப்பு அதிகாரங்களை வைத்தே இது சாத்தியமானது என்று தகவல்கள் கூறுகின்றன.

இந்திய அரசு (வணிக பரிவர்த்தனை விதிகள்) விதி 7-ன் படி, "இந்திய அரசியல் சட்டத்தின் இரண்டாவது அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள அவசர முடிவு உட்பட அனைத்து செயல்களுக்கும், அமைச்சரவை கூட்டத்துடனான ஆலோசனையை தொடர்ந்தே தீர்மானங்கள் எடுக்கப்பட வேண்டும்" என்பது விதி.

எனினும், இந்திய அரசு (வணிக பரிவர்த்தனை விதிகள்) விதி 12-ன் படி, "அத்தியாவசியம் என்று பிரதமர் நினைத்தால், அதற்கேற்ப, அமைச்சரவை கூட்டத்துடன் கலந்துரையாடல் மேற்கொள்ளாமலேயே முடிவுகள் எடுக்கலாம்" என்ற விதியின் அடிப்படையில் தான் பிரதமர் நரேந்திர மோடியின் அனுமதியுடனும், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் ஒப்புதலுடனும், மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவரது ஆட்சி திரும்ப பெறப்பட்டு பாஜக தலைமையிலான மாநில அரசின் ஆட்சி அமைக்கப்பட்டுள்ளது. 

இது குறித்த முன்னாள் மத்திய உள்துறை அமைச்சர் கூறுகையில், மகாராஷ்டிராவில் மேற்கொள்ளப்பட்ட எதுவுமே இந்திய அரசியல் சட்டத்திற்கு புறம்பாக இல்லை என்றும், அமைச்சர்களின் பிரதிநிதியாக பிரதமர் எடுத்திருக்கும் தீர்மானம் அரசியல் சட்டத்திற்கு கீழ்படிந்தே எடுக்கப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP