மகாராஷ்டிரா, ஹரியானா தேர்தல் நிலவரம்

மகாராஷ்டிரா மற்றும் ஹரியானாவில் பாஜக கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது.
 | 

மகாராஷ்டிரா, ஹரியானா தேர்தல் நிலவரம்

மகாராஷ்டிரா மற்றும் ஹரியானாவில் பாஜக கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது. 

ஹரியானா மற்றும் மகாராஷ்டிரா மாநில சட்டப்பேரவை தேர்தல் கடந்த 21ஆம் தேதி நடைபெற்றது. 288 தொகுதிகளை கொண்ட மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் பாஜக- சிவசேனா கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. பாஜக 164 தொகுதிகளிலும், சிவசேனா 124 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தியது. இதேபோல் காங்கிரஸ் -தேசியவாத காங்கிரஸ் கூட்டணியில் காங்கிரஸ் 147 இடங்களிலும், சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் 121 இடங்களிலும் களம் காண்கின்றன. இதுதவிர ராஜ்தாக்கரேயின் நவநிர்மாண் சேனா, பகுஜன் சமாஜ் உள்ளிட்ட கட்சிகளும் களத்தில் உள்ளன.

90 தொகுதிகளை கெர்ண்ட ஹரியானா மாநிலத்தில், தேசியக் கட்சிகளின் சார்பில் 279 வேட்பாளர்களும், மாநிலக் கட்சிகளின் சார்பில் 145 வேட்பாளர்களும், அங்கீகரிக்கப்படாத கட்சிகளின் சார்பில் 369 வேட்பாளர்களும் மற்றும் 376 சுயேச்சை வேட்பாளர்கள் என 1,169 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இன்று இரு மாநில தேர்தல் வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. 

8.00 மணி நிலவரம்:

மகாராஷ்டிரா: பாஜக, சிவசேனா  கூட்டணி 159 இடங்களில் முன்னிலை  பெற்றுள்ளது. தேசியவாத காங்கிரஸ் , அகில இந்திய காங்கிரஸ் கூட்டணி 102 இடங்களிலும். சுயேட்சை கட்சிகள் 26 தொகுதியிலும் முன்னிலையில் உள்ளது.

ஹரியானா: பாஜக 37 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது, 7 இடங்களில் முன்னிலையில் உள்ளது. காங்கிரஸ் 29 தொகுதிகளில் வெற்றி, 2 இடங்களில் முன்னிலையில் உள்ளது. ஜனநாயக் ஜனதா கட்சி 10 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

7.00 மணி நிலவரம்:

மகாராஷ்டிரா: பாஜக, சிவசேனா  கூட்டணி 159 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. தேசியவாத காங்கிரஸ் , அகில இந்திய காங்கிரஸ் கூட்டணி 102 இடங்களிலும். சுயேட்சை கட்சிகள் 26 தொகுதியிலும் முன்னிலை பெற்றுள்ளது. 

ஹரியானா: பாஜக 40  இடங்களிலும், காங்கிரஸ் 31 இடங்களிலும், மற்ற கட்சிகள் 19 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளது. 

6.00 மணி நிலவரம்:

மகாராஷ்டிரா: பாஜக 98 தொகுதிகளிலும் சிவசேனா கட்சி 58 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளது. தேசியவாத காங்கிரஸ் கட்சி 56  இடங்களிலும், அகில இந்திய காங்கிரஸ் 46 இடங்களிலும். சுயேட்சை கட்சிகள் 30 தொகுதியிலும் முன்னிலையில் உள்ளது.

ஹரியானா: பாஜக 40  இடங்களிலும், காங்கிரஸ் 30 இடங்களிலும், மற்ற கட்சிகள் 20 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. 

5.00 மணி நிலவரம்:

மகாராஷ்டிரா: பாஜக 23 தொகுதிகளிலும் சிவசேனா கட்சி 18 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. தேசியவாத காங்கிரஸ் கட்சி 15 இடங்களிலும், அகில இந்திய காங்கிரஸ் 16 இடங்களிலும். சுயேட்சை கட்சிகள் 4 தொகுதியிலும் வெற்றி பெற்றுள்ளது. மேலும், பாஜக கூட்டணி 114 இடங்களிலும், காங்கிரஸ் கூட்டணி 69 இடங்களிலும், மற்ற கட்சிகள் 29 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகிறது. 

ஹரியானா: பாஜக 14 இடங்களிலும், காங்கிரஸ் 11 இடங்களிலும், மற்ற கட்சிகள் 9 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. மேலும், பாஜக 24 தொகுதிகளிலும், காங்கிரஸ் 22 தொகுதிகளிலும், மற்றக் கட்சிகள் 10 தொகுதிகளிலும் முன்னிலை வகித்து வருகிறது. 

 

4.00 PM

மகாராஷ்டிரா: பாஜக 19 தொகுதிகளிலும் சிவசேனா கட்சி 12 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. தேசியவாத காங்கிரஸ் கட்சி 10 இடங்களிலும், அகில இந்திய காங்கிரஸ் 12 இடங்களிலும். சுயேட்சை கட்சிகள் 2 தொகுதியிலும் வெற்றிபெற்றுள்ளது. மேலும், பாஜக கூட்டணி 125 இடங்களிலும், காங்கிரஸ் கூட்டணி 77 இடங்களிலும், மற்ற கட்சிகள் 31 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகிறது. 

ஹரியானா: பாஜக 13 இடங்களிலும், காங்கிரஸ் 11 இடங்களிலும், மற்ற கட்சிகள் 7 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. மேலும், பாஜக 25 தொகுதிகளிலும், காங்கிரஸ் 22 தொகுதிகளிலும், மற்றக் கட்சிகள் 12 தொகுதிகளிலும் முன்னிலை வகித்து வருகிறது. 

3.00 PM 

மகாராஷ்டிரா மாநிலத்தில் பாஜக 10 தொகுதிகளிலும் சிவசேனா கட்சி 8 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. தேசியவாத காங்கிரஸ் கட்சி 4 இடங்களிலும், அகில இந்திய காங்கிரஸ் 3 இடங்களிலும். சுயேட்சை கட்சிகள் 1 தொகுதியிலும் வெற்றிபெற்றுள்ளது. மேலும், பாஜக கூட்டணி 141 இடங்களிலும், காங்கிரஸ் கூட்டணி 93 இடங்களிலும், மற்ற கட்சிகள் 28 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகிறது. 

ஹரியானா மாநிலத்தில், பாஜக 4 இடங்களிலும், காங்கிரஸ் 3 இடங்களிலும், மற்ற கட்சிகள் 6 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. மேலும், பாஜக 33 தொகுதிகளிலும், காங்கிரஸ் 31 தொகுதிகளிலும், மற்றக் கட்சிகள் 13 தொகுதிகளிலும் முன்னிலை வகித்து வருகிறது. 

1.00 PM

மகாராஷ்டிரா : பாஜக கூட்டணி 165, காங்.,கூட்டணி 94, மற்றவை 29 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கிறது. 

ஹரியானா : பாஜக கூட்டணி 39, காங்., கூட்டணி 33, மற்றவை 18 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கிறது. 

12.00 PM 

மகாராஷ்டிரா : பாஜக கூட்டணி 161, காங்.,கூட்டணி 98, மற்றவை 29 

ஹரியானா : பாஜக கூட்டணி 41, காங்., கூட்டணி 29, மற்றவை 20 

11.00 AM

மகாராஷ்டிரா மாநிலத்தில் பாஜக கூட்டணி 175 தொகுதிகளிலும், காங்கிரஸ் கூட்டணி 91 தொகுதிகளிலும், மற்றவை 22 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கிறது. ஹரியானா மாநிலத்தில் பாஜக கூட்டணி 40 தொகுதிகளிலும், காங்கிரஸ் கூட்டணி 30 தொகுதிகளிலும், மற்றவை 20 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கிறது.

10.00 AM

மகாராஷ்டிரா மாநிலத்தில் பாஜக கூட்டணி 185 தொகுதிகளிலும், காங்கிரஸ் கூட்டணி 88 தொகுதிகளிலும் முன்னிலை வகித்து வருகிறது. ஹரியானாவில் பாஜக கூட்டணி 44 இடங்களிலும் காங்கிரஸ் கூட்டணி 30 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகிறது. 

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP