சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கேரள உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்க பரிந்துரை!

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி மணிக்குமார், கேரள உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக மாற்ற கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது.
 | 

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கேரள உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்க பரிந்துரை!

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி மணிக்குமார், கேரள உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக மாற்ற கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது.

உயர்நீதிமன்ற நீதிபதிகள், தலைமை நீதிபதிகளாக மாற்றுவதற்கு உச்ச நீதிமன்ற கொலிஜியம் நிச்சயம் பரிந்துரை செய்யும். அதன்படி,  சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி மணிக்குமார், கேரள உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமனம் செய்ய கொலிஜியம் பரிந்துரைத்துள்ளது. இவர், 2006 ஆம் ஆண்டு முதல் சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. 

இதுதவிர, ஆந்திரப்பிரதேசம், கவுகாத்தி, பஞ்சாப் மற்றும் ஹரியானா, இமாச்சலப் பிரதேசம், ராஜஸ்தான், சிக்கிம், குஜராத் ஆகிய மாநிலங்களுக்கும் புதிய உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகள் நியமிக்கப்பட பரிந்துரை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP