மத்தியப்பிரதேசம்: மாவட்ட ஆட்சியருக்கு மிரட்டல் விடுத்த காங்கிரஸ்  எம்எல்ஏ!

மத்தியப்பிரதேச மாநிலத்தில், ஆளும் காங்கிரஸை சேர்ந்த பெண் எம்எல்ஏ ஒருவர், மாவட்ட ஆட்சியரை பணியிட மாற்றம் செய்ய வைத்திடுவேன் என மிரட்டியுள்ள சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
 | 

மத்தியப்பிரதேச  மாநிலத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள காங்கிரஸ் அரசு, 24 மாவட்ட ஆட்சியர்களை நேற்று முன்தினம் நள்ளிரவு பணியிட மாற்றம் செய்து அதிரடி உத்தரவிட்டது.

முன்னதாக வியாழக்கிழமை, "அலிராஜ்பூர் மாவட்ட ஆட்சியரை பணியிட மாற்றம் செய்ய வைத்திடுவேன்" என ஆளும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏ கலாவதி புரியா மிரட்டல் விடுக்கும் விடியோ காட்சி தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

அவர் மிரட்டல் விடுத்ததை போன்றே மாவட்ட ஆட்சியர்கள் பணியிட மாற்ற பட்டியலில் அலிராஜ்பூர் மாவட்ட ஆட்சியரின் பெயரும் இடம்பெற்றிருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP