மத்தியப்பிரதேச முதல்வர் மீதான சீக்கியர்கள் படுகொலை வழக்குகளில் மீண்டும் விசாரணை

சீக்கிய மதத்திற்கு எதிராக நடந்த தாக்குதலில் 7 வழக்குகள் மீண்டும் விசாரணைக்கு உட்படுத்தபட்ட நிலையில் அவற்றுள் ஒன்றான குருத்வாரா ராகாப் கஞ்ச் வெளியே வைத்து இருவரை கொலை செய்த வழக்கை மீண்டும் கையில் எடுக்க முடிவு
 | 

மத்தியப்பிரதேச முதல்வர் மீதான சீக்கியர்கள் படுகொலை வழக்குகளில் மீண்டும் விசாரணை

சீக்கிய மதத்திற்கு எதிராக நடந்த தாக்குதலில் 7 வழக்குகள் மீண்டும் விசாரணைக்கு உட்படுத்தபட்ட நிலையில் அவற்றுள் ஒன்றான குருத்வாரா ராகாப் கஞ்ச் வெளியே வைத்து இருவரை கொலை செய்த வழக்கில் காங்கிரஸ் தலைவரும், மத்திய பிரதேச மாநிலத்தின் முதலமைச்சருமான கமல்நாத் உட்பட பல காங்கிரஸ் தலைவர்கள் மீதான வழக்கு மீது மீண்டும் விசாரணை  நடத்திட  சிறப்பு புலனாய்வுக் குழு முடிவெடுத்துள்ளது.

1984 ஆம் ஆண்டு பிரதமராக இருந்த இந்திரா காந்தியை சீக்கியரான அவரது பாதுகாவலர் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார். அதையடுத்து காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் டெல்லியில் வசித்து வந்த சீக்கியர்கள் மீது வன்முறையை கட்டவிழ்த்து விட்டு 3600க்கும் மேற்பட்டோரை கொடூரமாகக் கொன்றழித்தனர். இது தொடர்பாக பதியப்பட்டுள்ள பல வழக்குகளில் சிறப்பு புலனாய்வுக் குழு மறுவிசாரணையைத் தொடங்கி நடத்தி வருகிறது.

இந்திரா காந்திக் கொலைக்குப் பின் நடந்த 1984 சீக்கியர்களுக்கு எதிரான  தாக்குதல் வழக்குகளில் இதுவரை 80 வழக்குகளை சிறப்பு புலனாய்வுக் குழு மீண்டும் விசாரணைக்குக் கொண்டு வந்துள்ளது. இதன் தொடர்பாக கடந்த ஆண்டு காங்கிரஸ் தலைவர் சஐன் குமார் ஆயுட்கால தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டார்.

மேலும் டெல்லி வஸந்த் விஹார், சன் லைட் காலனி வழக்கு, கல்யான்பூரி, பாராளுமன்ற ஸ்ட்ரீட் வழக்கு, கானாட் ப்ளேஸ், படேல் நகர் மற்றும் ஷாதாரா போன்ற இடங்களில் நடைபெற்ற சீக்கியர்கள் மீதான கலவரம் தொடர்பான வழக்குகளையும் சிறப்பு புலனாய்வு மீண்டும் விசாரணைக்கு எடுத்து நடத்தி வருகிறது. அதேபோல ராகாப் கஞ்ச் குருத்தவாரா அருகே நடைபெற்ற படுகொலைகளில் காங்கிரஸ் தலைவரும், மத்தியப்பிரதேசத்தின் தற்போதைய முதல்வருமான கமல்நாத் மீது பதியப்படுட்டுள்ள வழக்கினையும் சிறப்பு புலனாய்வுக்குழு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உள்ளதாகத் தகவல்கள் வெளியாக உள்ளன. 

இது தொடர்பாக மத்திய அமைச்சர் ஹர்சிம்ரத் கௌர் பாதல் கூறுகையில் , "1984 ஆம் ஆண்டு சீக்கியர்கள் மீது நடைபெற்ற கலவர வழக்குகள் மீண்டும் விசாரணைக்கு வந்துள்ளதால் கமல்நாத் இம்முறை அவரது குற்றங்களுக்கான தண்டணை பெறுவார்".என்று குறிப்பிட்டுள்ளார்.
கமல்நாத்தின் அரசியல் ஒருங்கிணைப்பாளராக பதவி வகித்து வரும் நரேந்தர் சலுஐா, “கமல்நாத் மீது நேரடியான  குற்றச்சாட்டுகளோ, முதல் தகவல் அறிக்கையோ இல்லாத நிலையில் 35 ஆண்டுகள் கழித்து இப்போது இந்தக் குற்றங்களைக் குறிப்பிடுவதன் நோக்கம் பாஜகவை தேர்தலில் வீழ்த்தி  மத்திய பிரதேச மாநிலத்தின் முதலமைச்சராக கமல்நாத் ஆனதே காரணம்” எனகருத்து தெரிவித்துள்ளார்.

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP