மத்தியப் பிரதேச முதலமைச்சர் கமல்நாத்தின் உதவியாளர்கள் வீடுகளில் சோதனை

மத்தியப்பிரதேச முதலமைச்சர் கமல்நாத்தின் உதவியாளர் வீடுகளில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. போபாலில் நடைபெற்ற மற்றொரு வருமான வரி சோதனையில் சூட்கேஸ்களில் இருந்து கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
 | 

மத்தியப்பிரதேச மாநில முதலமைச்சர் கமல்நாத்தின் சிறப்பு உதவி அதிகாரியாகப் பணிபுரிந்த பிரவீன் கக்கார் என்பவரின் வீடு இந்தூரில் உள்ளது. அங்கு இன்று அதிகாலை 3 மணி முதல் வருமான வரித்துறை சோதனை நடைபெறுகிறது.

இதேபோல் கமல்நாத்தின் ஆலோசகராக இருந்த ஆர்.கே. மிக்லானியின் டெல்லி வீட்டில் சோதனை நடைபெறுகிறது. மொத்தமாக போபால், கோவா, டெல்லி உள்ளிட்ட 50 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.

300க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சட்டவிரோத பணப்பரிவர்த்தனை புகார் தொடர்பாக சோதனை நடப்பதாகக் கூறப்படுகிறது. போபாலில் உள்ள பிரதீக் ஜோசி என்பவரது வீட்டில் சோதனை நடத்தப்பட்டது.

அப்போது ஏராளமான சூட்கேஸ்களில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த கோடிக்கணக்கிலான பணம் சிக்கியது. அவற்றைப் பறிமுதல் செய்த அதிகாரிகள் எண்ணும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட பணம் 9 கோடி ரூபாய் வரை இருக்கலாம் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP