மக்களவை பொதுத் தேர்தல் & தமிழக இடைத்தேர்தல்: வெற்றி வாகை சூடப்போவது யார்?

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் மற்றும் 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் முடிவுகள் இன்று வெளியாக உள்ளன இதையடுத்து சற்றுமுன் வாக்கு எண்ணிக்கை பணிகள் தொடங்கி உள்ளது.
 | 

மக்களவை பொதுத் தேர்தல் & தமிழக இடைத்தேர்தல்: வெற்றி வாகை சூடப்போவது யார்?

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் மற்றும் 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் முடிவுகள் இன்று வெளியாக உள்ளன இதையடுத்து சற்றுமுன் வாக்கு எண்ணிக்கை பணிகள் தொடங்கி உள்ளது.

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல்

17வது நாடாளுமன்ற மக்களவை தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் 11ம் தேதி தொடங்கி மே 19ம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற்றது. நாடு முழுவதும் உள்ள மொத்தம் உள்ள 543 மக்களவை தொகுதிகளில் வேலூர் தவிர 542 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவானது நடைபெற்று முடிவடைந்துள்ளது. 

மக்களவைத் தேர்தலுடன் ஆந்திரப் பிரதேசம், அருணாச்சல பிரதேசம், ஒடிசா, சிக்கிம் ஆகிய நான்கு மாநில சட்டசபை தேர்தலும் நடந்துள்ளது. உலகிலேயே அதிக மக்களைக் கொண்ட இரண்டாவது பெரிய நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது. அந்த வகையில் இந்தத் தேர்தல் மிகப் பெரிய ஜனநாயக திருவிழாவாகவே உலக நாடுகள் மத்தியில் பார்க்கப்படுகிறது. 

தேர்தல் முடிவுகளை அறிவிப்பதில் வழக்கமான நேரத்தை விட ஐந்து மணி நேரம் தாமதம் ஆகும் என்று தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதையடுத்து, இன்று இந்தியாவில் யார் ஆட்சி அமைக்கப் போகிறார் என்பதை மக்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்தியா மட்டுமின்றி உலக நாடுகள் பலவும் இன்று தேர்தல் முடிவுகளை எதிர்நோக்கியுள்ளன. இந்த தேர்தலைப் பொறுத்தவரையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி, ஐக்கிய முற்போக்கு கூட்டணி, மாநில கட்சிகள் என மும்முனைப் போட்டி நிலவுவதால் தேர்தல் முடிவுகள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தமிழக சட்டப்பேரவை இடைத்தேர்தல்

தமிழகத்தைப் பொறுத்தவரையில் 38 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும் காலியாக உள்ள 22 சட்டசபை தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற்றுள்ளது. 

தமிழகத்தைப் பொறுத்தவரையில் கடந்த ஏப்ரல் 18ம் தேதி தமிழகத்தில் உள்ள 38 மக்களவைத் தொகுதிகளுக்கு காலியாக இருந்த 18 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து திருப்பரங்குன்றம், ஒட்டபிடாரம், அரவக்குறிச்சி ஆகிய தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக நீதிமன்றத்தில் இருந்த வழக்குகள் முடிவுக்கு வந்ததால், எஞ்சியுள்ள திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம், அரவக்குறிச்சி, சூலூர் ஆகிய  4 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு மே 19ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. 

மொத்தமாக தமிழகத்தில் 22 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடந்து இன்று அதற்கான முடிவுகள் வெளியாக இருக்கின்றன. இந்த இடைத்தேர்தல் முடிவுகள் தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் என்று எதிர்க்கட்சிகள் கருதுகின்றன. எனவே மக்களும் இந்த முடிவுகளை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். 

இதையடுத்து இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கையானது தொடங்கியுள்ளது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP