மக்களவை தேர்தல்- மாநில செயலாளர்களுக்கு தேர்தல் ஆணையம் கடிதம்

மக்களவை தேர்தல் தொடர்பாக அனைத்து மாநில தலைமை செயலாளர்களுக்கும் தலைமை தேர்தல் ஆணையம் சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
 | 

மக்களவை தேர்தல்-  மாநில செயலாளர்களுக்கு தேர்தல் ஆணையம் கடிதம்

மக்களவை தேர்தல் தொடர்பாக அனைத்து மாநில தலைமை செயலாளர்களுக்கும் தலைமை தேர்தல் ஆணையம் சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

2019 மக்களவை தேர்தல் மற்றும் ஆந்திரா, அருணாச்சல பிரதேசம், ஒடிசா மற்றும் சிக்கிம் மாநில சட்டசபை தேர்தல்கள் நடைபெற உள்ளதால், அதிகாரிகள் பணியிட மாற்றம் மற்றும் பணி நியமனம் தொடர்பாக அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச தலைமை செயலாளர்கள் மற்றும் தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கும் தலைமை தேர்தல் கமிஷன் கடிதம் அனுப்பி உள்ளது.

அதிக காலம் பணிசெய்யும் அதிகாரிகள் தேர்தல் பணியில் ஈடுபட வேண்டி இருந்தால் அவர்களை வேறு இடங்களுக்கு பணியிட மாற்றம் செய்ய வேண்டும். அதிகாரிகள் அவர்களின் சொந்த ஊர்களில் பணி நியமனம் செய்யப்பட கூடாது. 

2019 மே 31 அல்லது அதற்கு முன் 3 ஆண்டுகள் ஒரே இடத்தில் பணி செய்திருந்தால் அவர்களை வேறு இடங்களுக்கு மாற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட விதிகளை கடைபிடிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP