மக்களவை: எஸ்.பி.ஜி காவல் வாபஸ் குறித்து விளக்கம் கேட்டு காங்கிரஸ் வெளிநடப்பு

சோனியா காந்தி குடும்பத்திற்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு படைப் பிரிவு பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டது குறித்து பிரதமர் நரேந்திமோடி நாடாளுமன்றத்தில் பதிலளிக்க வலியுறுத்தி காங்கிரஸ் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
 | 

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் அவரது குடும்பத்திற்கு வழங்கப்பட்டது சாதாரண பாதுகாப்பு அல்ல என்றும், காந்தி குடும்பத்திற்கு சிறப்பு படைப் பிரிவு பாதுகாப்பை(எஸ்.பி.ஜி) முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அனுமதித்திருந்ததாகவும் காங்கிரஸ் மூத்த தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி மக்களவையில் குறிப்பிட்டார். மேலும், 1991 முதல் 2019 வரையில் என்.டி.ஏ இரண்டு முறை ஆட்சிக்கு வந்தது, ஆனால் அவர்களின் எஸ்.பி.ஜி பாதுகாப்பு ஒருபோதும் அகற்றப்படவில்லை என்றும்,  பிரதமர் மோடி பாதுகாப்பை வாபஸ் பெற்றது குறித்து உரிய விளக்கமளிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார். பின்னர் சிறப்பு பாதுகாப்பு குழுவின் பாதுகாவலை நீக்கியது குறித்து பிரதமர் நரேந்திர மோடி நாடாளுமன்றத்தில் நேரில் வந்து விளக்கமளிக்க வேண்டுமென்று கோரி காங்கிரஸ் உறுப்பினர்கள் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர். 

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP