Logo

லைசென்ஸ், ஆர்.சி.புக்கை மொபைல் போனில் காட்டினால் போதும்...!

டூ வீலர், கார் வைத்திருப்போர் இனி ஆர்சிபுக், டிரைவிங் லைசென்ஸ், இன்சூரன்ஸ் உள்ளிட்டவற்றைக் காகித ஆவணமாக வைக்காமல், தங்கள் மொபைல் போனில் டிஜிட்டல் ஆவணங்களாக வைத்துக்கொள்ளலாம் என்று மத்திய அரசு நிலையான விதிமுறைகளை வெளியிட்டுள்ளது.
 | 

லைசென்ஸ், ஆர்.சி.புக்கை மொபைல் போனில் காட்டினால் போதும்...!

வாகன ஓட்டிகள் தங்களது ஆர்சிபுக், டிரைவிங் லைசென்ஸ் உள்ளிட்ட ஆவணங்களை டிஜிட்டல் ஆவணங்களாக வைத்துக் கொள்ளலாம் என மத்திய அரசு நிலையான விதிமுறைகளை வெளியிட்டுள்ளது.

டூ வீலர், கார் வைத்திருப்போர் இனி ஆர்சிபுக், டிரைவிங் லைசென்ஸ், இன்சூரன்ஸ் உள்ளிட்டவற்றைக் காகித ஆவணமாக வைக்காமல், தங்கள் மொபைல் போனில் டிஜிட்டல் ஆவணங்களாக வைத்துக்கொள்ளலாம் என்று மத்திய அரசு நிலையான விதிமுறைகளை வெளியிட்டுள்ளது.

அனைத்து மாநில அரசுகளும் இதைப் பின்பற்றுமாறும், வாகன ஓட்டிகளை காகித வடிவிலான ஆவணங்களைக் கேட்டு வற்புறுத்தாமல், டிஜிட்டல் ஆவணங்களை ஏற்றுக்கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டுள்ளது. இனிமேல், இரு சக்கர, நான்கு சக்கர, மற்றும் கனரக வாகன ஓட்டிகள் இனிமேல் தங்களின் வாகனங்களின் ஆர்சி புக், ஓட்டுநர் உரிமம், இன்சூரன்ஸ் ஆவணம், புகைக்கட்டுப்பாட்டு சான்று, எப்.சி போன்றவற்றை ஆவணங்களாக வாகனத்தில் வைத்திருக்கத் தேவையில்லை.

மத்திய அரசின் டிஜிலாக்கர், எம்பரிவாஹன் ஆகிய ஆப்-களை பயன்படுத்தி அதில் டிஜிட்டல் ஆவணங்களாக வைத்துக்கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளது. இந்த ஆப்ஸ் மூலம் வாகன ஓட்டிகள், உரிமையாளர்கள் தங்களின் ஓட்டுநர் உரிமம், ஆர்சி புக் உள்ளிட்ட அனைத்தையும் இலவசமாகப் பதிவிறக்கம் செய்து சேமித்துக்கொள்ள முடியும். மேலும் கியூஆர் கோடு அளிக்கப்படும். இதன்மூலம் வாகன ஓட்டிகளைச் சோதனையிடும் போலீஸார், போக்குவரத்து அதிகாரிகள், போக்குவரத்து போலீஸார் தங்களின் ஆண்ட்ராய்ட் போன் மூலம் கியூஆர் கோடை ஸ்கேன் செய்து விவரங்களைப் பெற முடியும்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP