ஆஜராக 4 வாரம் அவகாசம் கேட்டு அதிருப்தி எம்.எல்.ஏக்கள் கடிதம்

கர்நாடகா அதிருப்தி எம்.எல்.ஏக்கள் நேரில் ஆஜராகி விளக்கம் தர 4 வார காலஅவகாசம் கேட்டு சபாநாயகருக்கு கடிதம் அனுப்புள்ளனர்.
 | 

ஆஜராக 4 வாரம் அவகாசம் கேட்டு அதிருப்தி எம்.எல்.ஏக்கள் கடிதம்

கர்நாடகா அதிருப்தி எம்.எல்.ஏக்கள் நேரில் ஆஜராகி விளக்கம் தர 4 வார காலஅவகாசம் கேட்டு சபாநாயகருக்கு கடிதம் அனுப்புள்ளனர். 

கர்நாடகாவில் காங்கிரஸ் - மஜத கூட்டணி ஆட்சி நடைபெற்றுவரும் நிலையில், 16 எம்.எல்.ஏக்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர். ஆனால் இவர்கள் ராஜினாமா கடிதம் குறித்து சபாநாயகர் எவ்வித முடிவும் எடுக்கவில்லை. இதனால் அதிருப்தி எம்எல்ஏக்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். 

இதனிடையே சட்டப்பேரவையில், பாஜக எம்எல்ஏக்கள் பெரும்பான்மையை நிரூபிக்கக்கோரி வலியுறுத்தினர். இந்நிலையில், நேற்று அதிருப்தி எம்.எல்.ஏக்கள் கட்சி கொறடாக்களின் உத்தரவை மீறியதால் ஏன் தகுதி நீக்கம் செய்யக்கூடாது என கேட்டு சபாநாயகர் அதிருப்தி எம்.எல்.ஏக்களுக்கு சம்மன் அனுப்பி இருந்தார். மேலும், இன்று காலை 11 மணிக்குள் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி உத்தரவிட்டிருந்தார். 

இந்நிலையில், நேரில் ஆஜராகி விளக்கம் தர 4 வார கால அவகாசம் கேட்டு சபாநாயகருக்கு அதிருப்தி எம்எல்ஏக்கள் கடிதம் அனுப்பியுள்ளனர். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP