ஆணுஆயுதத்தை கையில் எடுப்போம்: ராஜ்நாத் சிங் அதிரடி பேட்டி

சூழ்நிலையைபொறுத்து ஆணுஆயுதத்தை கையில் எடுப்போம் என்று பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
 | 

ஆணுஆயுதத்தை கையில் எடுப்போம்:  ராஜ்நாத் சிங் அதிரடி பேட்டி

சூழ்நிலையைபொறுத்து ஆணுஆயுதத்தை கையில் எடுப்போம் என்று பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் முதலாமாண்டு நினைவுதினத்தையொட்டி, அணுஆயுத சோதனை நடத்தப்பட்ட பொக்ரானில் வாஜ்பாயின் உருவப்படத்திற்கு பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

இதன்பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், ‘முதலில் அணுஆயுதத்தை கையில் எடுக்கக்கூடாது என்ற கொள்கையை இந்தியா கடைபிடித்து வருகிறது. அணுஆயுதத்தை பயன்படுத்துவதில்லை என்ற கொள்கை எதிர்காலத்தில் சூழ்நிலையை பொறுத்து மாறுபடும்’ என்றுபாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். மத்தியில் வாஜ்பாய் ஆட்சியின்போது பொக்ரானில் அணுகுண்டு சோதனை நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தான் உடனான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில், பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இவ்வாறு தெரிவித்துள்ளது, பாகிஸ்தானுக்கு மறைமுகமாக எச்சரிக்கை விடுத்துள்ளதாக கருதப்படுகிறது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP