கார்கில் போரில் உயிர் நீத்தவர்களுக்கு தலைவணங்குவோம்: குடியரசுத்தலைவர்

நாட்டை பாதுகாக்க கார்கில் போரில் இன்னுயிரை நீத்தவர்களுக்கு இந்நாளில் தலைவணங்குவோம் என குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் கார்கில் வெற்றி தினத்தை நினைவு கூர்ந்துள்ளார்.
 | 

1999 ஆம் ஆண்டு காஷ்மீர் எல்லையில் கார்கில் பகுதியில் ஊடுருவிய பாகிஸ்தான் தீவிரவாதிகளை இந்திய ராணுவம் விரட்டி அடித்து இந்திய பகுதியை கைப்பற்றியது. இந்தப் போரில் வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்களின் தியாகத்தை நினைவு கூறும் பொருட்டு ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 26ம் தேதி கார்கில் தினமாக கடைபிடிக்கப்பட்டுவருகிறது. போரில் உயிரிழந்த வீரர்களுக்கு வீர வணக்கம் செலுத்தப்படுகிறது. 

கார்கில் வெற்றி தினத்தை குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் நினைவு கூர்ந்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "1999ம் ஆண்டு காஷ்மீரில் நடைபெற்ற கார்கில் போரில் நாட்டை பாதுகாக்க தன்னுயிரை நீத்தவர்களுக்கு இந்நாளில் தலைவணங்குவோம். அவர்கள் நாட்டுக்காக செய்த தியாகத்தை இந்நாடு என்றும் நினைவு கூறும். அவர்களது வீரத்திற்கும், துணிச்சலுக்கும் தலை வணங்குவோம்" என்று பதிவிட்டுள்ளார்.  

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP