நித்தியை கைது செய்வதில் சட்டச் சிக்கல்.. திக்குமுக்காடும் கர்நாடக காவல்துறை !

நித்தியை கைது செய்வதில் சட்டச் சிக்கல்.. திக்குமுக்காடும் கர்நாடக காவல்துறை !
 | 

நித்தியை கைது செய்வதில் சட்டச் சிக்கல்.. திக்குமுக்காடும் கர்நாடக காவல்துறை !

சாமியார் நித்தியானந்தா மீது அவரது பெண் சீடர்கள், ஆண் சீடர்கள் பாலியல் புகார் அளித்துள்ளனர். மேலும் பணமோசடி, ஆள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. சமீபத்தில், குஜராத்தில் நித்தியானந்தா நடத்தி வந்த ஆசிரமம் மூடப்பட்டு அனைவரும் வெளியேற்றப்பட்டனர். அதுமட்டுமில்லாமல், ஆசிரம நிர்வாகிகள் இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர்.

நித்தியை கைது செய்வதில் சட்டச் சிக்கல்.. திக்குமுக்காடும் கர்நாடக காவல்துறை !

இந்நிலையில் நித்தியானந்தாவை காவல்துறையினர் தேடி வரும் நிலையில், அவரோ அடிக்கடி யூடியூபில் வீடியோ பதிவேற்றம் செய்து வருகிறார். அவரைக் கைது செய்து நீதிமன்றத்தில் 18 ஆம் தேதிக்குள் ஆஜர் படுத்த வேண்டும் என்று கர்நாடக உயர்நீதிமன்றம் கர்நாடக காவல்துறைக்கு உத்தரவிட்டது. ஆனால், காலக்கெடு முடிந்தும் நித்தியானந்தா இன்னும் கைது செய்யப்படவில்லை.

நித்தியை கைது செய்வதில் சட்டச் சிக்கல்.. திக்குமுக்காடும் கர்நாடக காவல்துறை !

இது குறித்து தெரிவித்துள்ள கர்நாடக காவல்துறையினர், நித்தியானந்தாவைக் கைது செய்வதில் பல சட்ட சிக்கல்கள் உள்ளதால் தான் சிபிஐ உதவியை நாடியுள்ளோம். மேலும் அவருக்கு எதிராக ப்ளூ கார்னர் நோட்டீஸ் வெளியிட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர். வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளதால்அது குறித்த கூடுதல் தகவல்கள் தெரிவிக்க முடியாது என்றும் கூறுகின்றனர். 
 
newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP