சந்திராயன் 2வில் இருந்து வெற்றிகரமாக பிரிந்த லேண்டர்!

சந்திராயன் 2 ஆர்பிட்டரில் இருந்து லேண்டர் விக்ரம் வெற்றிகரமாக பிரிக்கப்பட்டதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
 | 

சந்திராயன் 2வில் இருந்து வெற்றிகரமாக பிரிந்த லேண்டர்!

சந்திராயன் 2 ஆர்பிட்டரில் இருந்து லேண்டர் விக்ரம் வெற்றிகரமாக பிரிக்கப்பட்டதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. 

இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, நிலவின் தென்துருவ பகுதியை ஆய்வு செய்வதற்காக கடந்த ஜூலை மாதம் ஸ்ரீஹரி கோட்டாவில் இருந்து  சந்திராயன் 2 விண்கலத்தை, ஜி.எஸ்.எல்.வி மார்க் 3- எம்.1 ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.  பல கட்ட நடவடிக்கைகளுக்கு பிறகு லேண்டர் நிலவில் தரையிறங்கும் என இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்திருந்தனர்.

நிலவை சுற்றிவரும் சந்திராயன்2 வில் இருந்து விக்ரம் லேண்டரை பிரிக்கும் பணியை இஸ்ரோ இன்று மேற்கொண்டது. சவாலான இந்த முயற்சியில் வெற்றிகரமாக லேண்டர் பிரிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. லேண்டர் விக்ரம் நிலவை நோக்கி செல்வதாகவும் வரும் செப்7ஆம் தேதி அதிகாலை லேண்டர் விக்ரம் நிலவில் தரையிறங்கும் எனவும் இஸ்ரோ தெரிவித்துள்ளது. 

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP