Logo

மாட்டுத்தீவன ஊழல் வழக்கில் லாலுவுக்கு ஜாமீன்!

மாட்டுத்தீவன ஊழல் தொடர்பான வழக்கில், தண்டனை பெற்ற லாலு பிரசாத் யாதவ், உடல்நலக்குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால், அவருக்கு ஜாமீன் வழங்கி ஜார்க்கண்ட் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 | 

பீகார் மாநில மாட்டுத்தீவன ஊழல் தொடர்பாக ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ், பீகார் மாநில முன்னாள் முதல்வர் ஜெகன்நாத் மிஸ்ரா உள்ளிட்டோர் மீது 5 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவற்றில், 3 வழக்குகளில் லாலு, குற்றவாளி என அறிவிக்கப்பட்டு மூன்று வழக்குகளிலும் முறையே 5 ஆண்டுகள், 3.5 ஆண்டுகள், 5 ஆண்டுகள் என தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 

இதனையடுத்து 4வது வழக்கான தும்கா கருவூலத்தில் 3.13 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கின் விசாரணை ராஞ்சி நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் லாலு குற்றவாளி என கடந்த மார்ச் 19ம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த வழக்கில் 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை, ரூ. 60 லட்சம் அபராதமும் விதிக்கப்படடுள்ளது. 

தற்போது உடல்நலக்குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் லாலு சிகிச்சை பெற்று வருவதால், அவருக்கு ஜாமீன் வழங்கி ஜார்க்கண்ட் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP