கும்பமேளாவில் நாய்களுக்கு ராஜ மரியாதை!

அலகாபாத்தில் நடைபெற்று வரும் உலக புகழ்பெற்ற கும்மேளாவில் பங்கேற்றுள்ள நாய்களுக்கு ராஜ மரியாதை அளிக்கப்படுகிறது.
 | 

கும்பமேளாவில் நாய்களுக்கு ராஜ மரியாதை!

அலகாபாத்தில் நடைபெற்று வரும் உலக புகழ்பெற்ற கும்மேளாவில், நாட்டின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த, ஹிந்துக்கள் பங்கேற்று, திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி வருகின்றனர். 

முன் எப்போதும் இல்லாத வகையில், இந்த ஆண்டு கும்பமேளாவில், சன்னியாசிக்கள், அகோரிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அவர்கள், அங்கு அமைக்கப்பட்டுள்ள, அகாடாக்களின் குடியிருப்பில் தங்கி, புனித நீராடி வருகின்றனர். 

இந்நிலையில், பஞ்சாப், சண்டிகர், அஜ்மீர் மற்றும் ஹிமாச்சல பிரதேசத்தின் பல பகுதிகளிலிருந்தும் வந்துள்ள சன்னியாசிகள், தங்களுடன் சில நாய்களை அழைத்து வந்துள்ளனர். 

இந்த நாய்கள், சன்னியாசிகளுடனே வசிப்பதோடு மட்டுமின்றி, காலை எழுந்து உடற்பயிற்சியில் ஈடுபடுவது முதல், டீ, காபி, காலை உணவாக, பாதாம், பிஸ்தா, கோதுமை அல்வா, மதிய உணவாக சப்பாத்தியுடன் பருப்பு கடைசல் மற்றும் இரவு உணவு என, ராஜ போக வாழ்க்கை வாழ்ந்து வருகின்றன. 

கும்பமேளாவில் நாய்களுக்கு ராஜ மரியாதை!

இந்த நாய்கள் உறங்குவதற்கென, அகாடாக்களின் சார்பில் சிறப்பு மெத்தைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

சன்னியாசிகள், தாங்கள் வளர்க்கும் நாய்களை, பைரவராக பார்ப்பதால், தான் உண்ணாமல் இருந்தால் கூட, அந்த நாய்களுக்கு சரியான நேரத்தில் மிகச் சிறந்த உணவு கிடைக்க வேண்டும் என்பதில் மிகவும் கவனமாக இருப்பதாக, அலகாபாத்தில் உள்ள அகாடா நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

இது போன்ற சம்பவங்கள், அலகாபாத் கும்பமேளாவுக்கு வரும் பக்தர்களுக்கு மிகவும் சுவாரசியத்தை அளிப்பதாகவும் அவர்கள் கூறினர். 

newstm.in
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP