இந்திய பொருளாதார ஆலோசகராக கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியன் நியமனம்!

இந்திய தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியம் தனது பதவியை ராஜினாமா செய்து 6 மாதங்கள் ஆன நிலையில், புதிய பொருளாதார ஆலோசகராக கிருஷ்ணமூர்த்தி சுப்பிரமணியன் நியமிக்கப்பட்டுள்ளார்.
 | 

இந்திய பொருளாதார ஆலோசகராக கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியன் நியமனம்!

இந்திய தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியம் தனது பதவியை ராஜினாமா செய்து 6 மாதங்கள் ஆன நிலையில், புதிய தலைமை பொருளாதார ஆலோசகராக கிருஷ்ணமூர்த்தி சுப்பிரமணியன் நியமிக்கப்பட்டுள்ளார்.

தனிப்பட்ட காரணங்களுக்காக இந்திய தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியம் தனது பதவியை ராஜினாமா செய்தார். அவர் பதவி விலகி 6 மாதங்கள் ஆன நிலையில், புதிய பொருளாதார ஆலோசகரை மத்திய அரசு நியமித்துள்ளது. 

ஐஐடி, ஐஐஎம் கல்லூரிகளில் பட்டம் பெற்ற சுப்பிரமணியன், சிகாகோ- பூத் வர்த்தகக் கல்லூரியில் பி.எச்.டி பட்டமும் பெற்றுள்ளார். இந்திய பொருளாதார கல்லூரியில் இணை பேராசிரியராகவும், நிதித்துறை பகுப்பாய்வு ஆணையத்தில் நிர்வாக இயக்குனராகவும் பணியாற்றி வருகிறார். தற்போது மத்திய அரசால், 3 ஆண்டுகளுக்கு இந்திய பொருளாதார ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அமெரிக்க நிறுவனங்களிலோ, உலக வங்கியிலோ பணியாற்றாமல், முழுக்க இந்தியாவிலும் இந்திய வங்கிகளிலும் பணியாற்றியுள்ள சிறப்பு இவருக்குரியது. ரிசர்வ் வங்கியின் வங்கி நிர்வாக வல்லுநர் கமிட்டி மற்றும் SEBI-யிலும் சுப்பிரமணியன் இருந்துள்ளார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP