பொதுத்தேர்வு எழுத குதிரையில் செல்லும் கேரள மாணவி! கேரளாவில் ருசிகரம்...

கேரள மாநிலத்தில் உள்ள திரிசூர் மாவட்டத்தைச் சேர்ந்த 10ம் வகுப்பு மாணவி ஒருவர், பொதுத்தேர்வு எழுத தனது வீட்டில் இருந்து பள்ளிக்கு குதிரையில் சென்றுள்ளார். அவர் கம்பீரமாக குதிரையில் சவாரி செய்யும் அந்த வீடியோவை மஹிந்திரா நிறுவனத்தின் தலைவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
 | 

பொதுத்தேர்வு எழுத குதிரையில் செல்லும் கேரள மாணவி! கேரளாவில் ருசிகரம்...

கேரள மாநிலத்தில் உள்ள திரிசூர் மாவட்டத்தைச் சேர்ந்த 10ம் வகுப்பு மாணவி ஒருவர், பொதுத்தேர்வு எழுத, தனது வீட்டில் இருந்து பள்ளிக்கு குதிரையில் சென்றுள்ளார். அவர், கம்பீரமாக குதிரையில் சவாரி செய்யும், அந்த வீடியோவை மஹிந்திரா நிறுவனத்தின் தலைவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 

மேலும் அவர், "இந்த மாணவி தான், என்னுடைய ஹீரோ. இவர் யார் என்பது குறித்த தகவல்கள் கிடைத்தால் பகிரவும், அவரது புகைப்படம் கிடைத்தால் அனுப்பவும். மாணவி குதிரையில் செல்லும் புகைப்படத்தை என்னுடைய 'ஸ்க்ரீன் சேவராக' வைத்துள்ளேன். அவரது இந்த வீடியோவை சமூக வலைத்தளங்களில் பரப்புங்கள்.. பெண்களின் கல்வி முன்னேற்றம் கண்டுவருகிறது. பெண்கல்வி முன்னேற்றத்திற்கு இது ஒரு எடுத்துக்காட்டு" என்று பதிவிட்டுள்ளார். 

 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP