காஷ்மீர் மக்களை துப்பாக்கி இன்றியே சந்திப்போம்: பிபின் ராவத்!

நாங்கள் ஜம்மு- காஷ்மீர் மக்களை கையில் துப்பாக்கி ஏந்தாமல், விரைவில் சந்திப்போம் என ராணுவ தலைமை தளபதி பிபின் ராவத் தெரிவித்துள்ளார்.
 | 

காஷ்மீர் மக்களை துப்பாக்கி இன்றியே சந்திப்போம்: பிபின் ராவத்!

நாங்கள் ஜம்மு- காஷ்மீர் மக்களை துப்பாக்கி ஏந்தாமலேயே சந்திக்க விரும்புவதாக ராணுவ தலைமை தளபதி பிபின் ராவத் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக பேசிய பிபின் ராவத், " கடந்த 1970, 1980 கால கட்டங்களில் ஜம்மு - காஷ்மீர் மக்களை ராணுவ வீரர்கள் சகஜமாக சந்திப்போம். தீவிரவாதம் குறித்த எவ்வித அச்சமும் அந்த தருணங்களில் எவருக்கும் இருந்ததில்லை. அப்போது, கல்லெறிதல் உள்ளிட்ட வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்ததில்லை.

தற்போது சட்டப்பிரிவு 370 திரும்பப்பெறப்பட்டுள்ளதையடுத்து அதே போன்ற அமைதியான சூழல் திரும்பத் தொடங்கியுள்ளது. விரைவில் கையில் துப்பாக்கி ஏந்தாமல், பாதுகாப்பு குறித்த பயம் இன்றியே மக்களை ராணுவ வீரர்களாகிய நாங்கள் சந்திப்போம் என நம்புவதாக தெரிவித்துள்ளார். 

newstm.in

 

 


 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP