காஷ்மீர்: துப்பாக்கிச்சண்டையில் பாதுகாப்புப்படை வீரர்கள் இருவர் காயம்!

காஷ்மீரில் பாதுகாப்புப்படையினருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச்சண்டையில் வீரர்கள் இருவர் படுகாயமடைந்தனர்.
 | 

காஷ்மீர்: துப்பாக்கிச்சண்டையில் பாதுகாப்புப்படை வீரர்கள் இருவர் காயம்!

காஷ்மீரில் பாதுகாப்புப்படையினருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச்சண்டையில் வீரர்கள் இருவர் படுகாயமடைந்தனர். 

ஜம்மு காஷ்மீர் மாநிலம் சோபியான் மாவட்டத்தில் உள்ள பாந்துஷான் பகுதியில் தீவிரவாதிகள் உள்நுழைந்ததாக பாதுகாப்புப்படையினருக்கு தகவல் வந்ததையடுத்து, பாதுகாப்புப்படையினர் அப்பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு பதுங்கியிருந்த தீவிரவாதிகள், பாதுகாப்புப்படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட, இரு தரப்பினருக்கும் இடையே கடுமையான துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. இதில், நமது பாதுகாப்புப்படை வீரர்கள் இருவர் படுகாயமடைந்ததாக இந்திய ராணுவத் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

துப்பாக்கிச்சண்டை தொடர்ந்து நடைபெற்று வருவதால் அப்பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது. 

newtm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP