காஷ்மீர் - இரண்டு தீவிரவாதிகள் சுட்டுக் கொலை; காவலர் பலி

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் இன்று நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் இரண்டு தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இந்த மோதலில் காவலர் ஒருவரும் பலியானார். இந்த மோதலையடுத்து அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
 | 

காஷ்மீர் - இரண்டு தீவிரவாதிகள் சுட்டுக் கொலை; காவலர் பலி

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், பாரமுல்லா மாவட்டத்தில் இன்று நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் இரண்டு தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இந்த மோதலில் காவலர் ஒருவரும் பலியானார். இந்த மாநிலத்தின் இருவேறு இடங்களில் நேற்று நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் 6 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

இந்நிலையில்,பாரமுல்லா மாவட்டத்துக்கு உள்பட்ட சோபோர் பகுதியில் இன்றும் பயங்கரவாதிகளை தேடும் பணியில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டனர். அப்போது, தீவிரவாதிகள் சுட்டதில் காவலர் ஒருவர் காயமடைந்தார். அடுத்த சில மணி நேரத்தில் அந்தக் காவலர் உயிரிழந்து விட்டார்.

இதற்கிடையே, பாதுகாப்புப் படையினருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையிலான சண்டை தொடர்ந்தது. இறுதியில் இரண்டு தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த மோதலையடுத்து அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், பாதுகாப்பு நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP