காஷ்மீர் - 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை

பாராசூட்டில் இருந்து இறங்கி தாக்குதல் நடத்தும் ராணுவத்தின் சிறப்பு படை வீரர்கள், மத்திய ரிசர்வ் போலீஸ் படை வீரர்கள், மாநில காவல்துறையினர் ஆகிய மூன்று படையினரும் கூட்டாக இணைந்து அப்பகுதியில் இன்று காலை தேடுதல் வேட்டையை தொடங்கினர்.
 | 

காஷ்மீர் - 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், ஷோபியான் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் இன்று நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 4 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இந்த மோதலின் போது ராணுவ வீரர் ஒருவரும் உயிரிழந்தார். மேலும் 3 வீரர்கள் காயமடைந்தனர்.

ஷோபியான் மாவட்டத்துக்கு உள்பட்ட நடிகாம் கிராமத்தில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாகத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, பாராசூட்டில் இருந்து இறங்கி தாக்குதல் நடத்தும் ராணுவத்தின் சிறப்பு படை வீரர்கள், மத்திய ரிசர்வ் போலீஸ் படை வீரர்கள், மாநில காவல்துறையினர் ஆகிய மூன்று படையினரும் கூட்டாக இணைந்து அப்பகுதியில் இன்று காலை தேடுதல் வேட்டையை தொடங்கினர்.

அப்போது, தீவிரவாதிகள்  தீடீரென துப்பாக்கிகளால் சுட்டனர். இதற்குப் பதிலடியாக பாதுகாப்புப் படையினரும் திருப்பிச் சுட்டனர். இதையடுத்து இரு தரப்பிலும் மோதல் மூண்டது. இந்தச் சண்டையின் இறுதியில் 4 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். அவர்கள் எந்த இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என்பது இதுவரை உறுதி செய்யப்படவில்லை. அதே சமயம், இந்த மோதலில் ராணுவ வீரர் ஒருவரும் பலியானார். இந்த மோதலை தொடர்ந்து, வதந்திகள் பரவுவதைத் தடுக்கும் வகையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஷோபியான் மாவட்டத்தில் செல்போன் இணையச் சேவைகள் உடனடியாக துண்டிக்கப்பட்டுள்ளன.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP