கர்நாடகா: சபாநாயகருக்கு எதிராக மேலும் சில எம்.எல்.ஏக்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு!

ராஜினாமா கடிதங்கள் மீது சபாநாயகர் விரைந்து நடவடிக்கை எடுக்கும்படி கர்நாடக எம்.எல்.ஏக்கள் 5 பேர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
 | 

கர்நாடகா: சபாநாயகருக்கு எதிராக மேலும் சில எம்.எல்.ஏக்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு!

ராஜினாமா கடிதங்கள் மீது சபாநாயகர் விரைந்து நடவடிக்கை எடுக்கும்படி கர்நாடக எம்.எல்.ஏக்கள் 5 பேர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். 

கர்நாடகாவில் ஆட்சி செய்து வரும் காங்கிரஸ் - மஜத கூட்டணி எம்.எல்.ஏக்கள் 16 பேர் (காங்கிரஸ் - 13, மஜத -3) தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர். தொடர்ந்து நடைபெறும் பல்வேறு நிகழ்வுகளால் கர்நாடக அரசியல் சூழலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

முதற்கட்டமாக 14 எம்.எல்.ஏக்கள் கடந்த வாரமே தங்களது ராஜினாமா மனுக்களை அளித்தும், அதுகுறித்து சபாநாயகர் ரமேஷ் குமார் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதையடுத்து, 10 எம்.எல்.ஏக்கள், தங்களது ராஜினாமா கடிதத்தை ஏற்க சபாநாயகருக்கு உத்தரவிடும்படி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். 

தொடர்ந்து வழக்கின் விசாரணையில், எம்.எல்.ஏக்களின் ராஜினாமா கடிதங்கள் மீது சபாநாயகர் நடவடிக்கை எடுக்க உச்ச நீதிமன்றம் தடை விதித்து வழக்கின் விசாரணையை வருகிற செவ்வாய்க்கிழமைக்கு (ஜூலை 16) ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில், ராஜினாமா கடிதங்கள் மீது சபாநாயகர் விரைந்து நடவடிக்கை எடுக்கும்படி எம்.எல்.ஏக்கள் 5 பேர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த வழக்கு தனியாக விசாரிக்கப்படுமா அல்லது ஏற்கனவே 10 எம்.எல்.ஏக்கள் தொடர்ந்த வழக்குடன் விசாரிக்கப்படுமா என்பது விரைவில் தெரிய வரும். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP