கர்நாடக உள்ளாட்சி தேர்தல் முடிவுகள்: காங்கிரஸ் முன்னிலை!

கர்நாடக 105 நகர உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் காங்கிரஸ் முன்னிலை வகித்து வருகிறது. பகல் 12 மணி நிலவரப்படி காங்கிரஸ் 560 இடங்கள், பா.ஜ.க 499 இடங்கள், ம.ஜ.த 178 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.
 | 

கர்நாடக உள்ளாட்சி தேர்தல் முடிவுகள்: காங்கிரஸ் முன்னிலை!

கர்நாடகாவில் 105 நகர உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் காங்கிரஸ் முன்னிலை வகித்து வருகிறது. 

கடந்த மாதம் 31ம் தேதி கர்நாடக மாநிலத்தின் மைசூரு, துமகூரு, சிவமொக்கா ஆகிய 3 மாநகராட்சிகள் உள்பட 105 நகர உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடைபெற்றது. இதில் மொத்தமாக 67.51 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. 

இதில் 30 வார்டுகளில் வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்தெடுக்கப்பட்டு உள்ளனர். மேலும் கலபுரகி, சாம்ராஜ்நகர் மாவட்டங்களில் 2 வார்டுகளில் தேர்தல் ரத்து செய்யப்பட்டது. மொத்தம் 2,633 வார்டுகளுக்கு தேர்தல் நடைபெற்றது. இதில் 9,121 வேட்பாளர்கள் போட்டியிட்டுள்ளனர். 

இந்நிலையில், இன்று இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது வருகிறது. காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவில் தொடர்ந்து காங்கிரஸ் கட்சி முன்னிலை பெற்று வருகிறது. 

பகல் 12 மணியளவில், 1,412 இடங்களின் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் காங்கிரஸ் 560 இடங்கள், பா.ஜ.க 499 இடங்கள், ம.ஜ.த 178 இடங்கள் மற்றும் சுயேட்சை கட்சி 150 இடங்களில் வெற்றி பெற்றுள்ளன. எனினும் எந்த கட்சிக்கு பெரும்பான்மை கிடைக்காது என்று அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP