பரபரப்பான சூழலில் நாளை கர்நாடக காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கூட்டம்!

கர்நாடகாவின் பரபரப்பான அரசியல் சூழலி, பெங்களூருவில் உள்ள தனியார் ஓட்டல் ஒன்றில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் நாளை நடைபெற உள்ளது.
 | 

பரபரப்பான சூழலில் நாளை கர்நாடக காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கூட்டம்!

கர்நாடகாவின் பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், பெங்களூருவில் உள்ள தனியார் ஓட்டல் ஒன்றில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் நாளை நடைபெற உள்ளது.

கர்நாடக சட்டப்பேரவையில் முதல்வர் குமாரசாமி அரசின் மீதான நம்பிக்கை கோரும் தீர்மானத்தின் மீது கடந்த இரு நாட்களாக(ஜூலை 18 & 19) விவாதம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து நாளை (ஜூலை 22) திங்கட்கிழமை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தக் கோரி அம்மாநில கவர்னர் வஜூபாய் வாலா இருமுறை அறிவுறுத்தியும், சபாநாயகர் வாக்கெடுப்பு நடத்த வில்லை.

இந்த சூழ்நிலையில் நாளை பெங்களூருவில் உள்ள தனியார் ஓட்டல் ஒன்றில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற உள்ளது. திங்கட்கிழமை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், அதுகுறித்து இந்த எம்எல்ஏக்களின் கூட்டத்தில் விவாதிக்கப்படலாம் என்று தெரிகிறது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP