கர்நாடக காங்கிரஸ் எம்.எல்.ஏவுக்கு நெஞ்சுவலி?

கர்நாடக சட்டப்பேரவையில் நம்பிக்கை கோரும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெற்று வரும் சூழலில் காங்கிரஸ் எம்.எல்.ஏ ஒருவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
 | 

கர்நாடக காங்கிரஸ் எம்.எல்.ஏவுக்கு நெஞ்சுவலி?

கர்நாடக சட்டப்பேரவையில் நம்பிக்கை கோரும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெற்று வரும் சூழலில், காங்கிரஸ் எம்.எல்.ஏ ஒருவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

கர்நாடகாவில் ஆளும் குமாரசாமி அரசுக்கு எதிராக, காங்கிரஸ் - மஜத எம்.எல்.ஏக்கள் 16 பேர் (காங்கிரஸ் - 13, மஜத -3) தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.  இதையடுத்து, முதலமைச்சரின் கோரிக்கைக்கு ஏற்ப இன்று கர்நாடக சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ளது. அதன்படி, இன்று காலை 11 மணிக்கு நம்பிக்கை கோரும் தீர்மானத்தின் மீதான விவாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில் பெங்களுருவில் மற்ற எம்.எல்.ஏக்களுடன் தங்கியிருந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ ஸ்ரீமந்த் பட்டீல் நேற்று இரவு மும்பை சென்றார். மும்பையில் இருந்த அவருக்கு இன்று திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. இதையடுத்து மும்பையில் தனியார் மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP