கர்நாடகா: ஆளுநருக்கு எதிராக முதல்வர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு?

நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவது குறித்த கர்நாடக ஆளுநரின் உத்தரவுக்கு எதிராக அம்மாநில முதல்வர் குமாரசாமி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடிவு செய்துள்ளார்.
 | 

கர்நாடக சட்டப்பேரவையில் முதல்வர் குமாரசாமியின் ஆட்சியின் மீது, நம்பிக்கை கோரும் தீர்மானத்தின் மீதான விவாதம் நேற்று நாள் முழுவதும் நடைபெற்றது. வேண்டுமென்றே நம்பிக்கை வாக்கெடுப்பை தாமதப்படுத்துவதாக பாஜக எம்எல்ஏக்கள் ஆளுநரை நேரில் சந்தித்து புகார் அளித்தனர்.

இதையடுத்து, நம்பிக்கை வாக்கெடுப்பை இன்று(ஜூலை 19) பிற்பகல் 1.30 மணிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்று ஆளுநர் கூறியுள்ளார்.

இந்நிலையில், ஆளுநர் காலக்கெடு விதித்ததற்கு தடை விதிக்கக்கோரி அம்மாநில முதல்வர் குமாரசாமி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடிவு செய்துள்ளார்.  

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP