கார்கில் வெற்றி இந்தியாவின் வலிமை, அமைதிக்கு கிடைத்த வெற்றி: பிரதமர் நரேந்திர மோடி

கார்கில் வெற்றி என்பது நமது மகன்கள், மகள்களின் வீரத்திற்கு கிடைத்த வெற்றி என்று, டெல்லியில் கார்கில் போர் வெற்றி தின நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பேசியுள்ளார்.
 | 

தொடர்ந்து பேசிய பிரதமர், ‘கார்கில் வெற்றி என்பது இந்தியாவின் வலிமை மற்றும் அமைதிக்கு கிடைத்த வெற்றி. நமது வீரர்கள், அவர்களின் குடும்ப நலனுக்காக கடந்த 5 ஆண்டுகளில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. பல ஆண்டுகளாக கிடப்பில் இருந்த ஒரே தகுதி ஒரே ஓய்வூதிய விவகாரத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. உயிர்த்தியாகம் செய்த ராணுவ வீரர்களின் குழந்தைகளுக்கான உதவித்தொகை உயர்த்தப்பட்டுள்ளது’ என்றார்.

மேலும், ‘தற்போது போர்கள் வானத்தை அடைந்துவிட்டன; இன்றைய நாளில் இணையத்திலும் போர்கள் நடைபெறுகின்றன. பாதுகாப்புத்துறையை நவீனப்படுத்துவது தேவை மட்டுமல்ல அதற்கு முன்னுரிமையும் தர வேண்டும். நவீனமயமாக்கல்தான் நமது பாதுகாப்புத்துறையின் அடையாளமாக இருக்க வேண்டும்’ என்றும் பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP