இன்று சோதனைக்கு உட்படுத்தப்படும் கே-4 ஏவுகணை!!

நீரின் ஆழம் வரை சென்று தாக்குதல் மேற்கொள்ளும் இரண்டு ஏவுகணைகளின் தயாரிப்பில் ஈடுபட்டிருந்த இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு கழகம், அதில் ஒன்றான கே-4 எனப்படும் ஏவுகணையை வெள்ளிக்கிழமையான இன்று சோதனைக்கு உட்படுத்தப்படவிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
 | 

டி.ஆர்.டி.ஓ ஆராய்ச்சியாளர்களால் தயாரிக்கப்பட்டுள்ள கே-4 ஏவுகணை, நீர்மூழ்கி கப்பலில் இருந்து சுமார் 3500 கிமி தூரம் வரை சென்று எதிரிகளின் இலக்குகளை அழிக்கும் சக்தி வாய்ந்தது. கடந்த மாதமே பரிசோதனைக்கு உட்படுத்தப்படவிருந்த இந்த ஏவுகணை, சில தொழில்நுட்ப காரணங்களால் இந்த மாதத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டது.

இதை தொடர்ந்து, தற்போது இதன் சோதனை தேதியை அறிவித்திருக்கும் இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு கழகம், ஆந்திரபிரதேச மாநிலம் விசாகப்பட்டினத்தில் வைத்து சோதிக்கப்படும் என்ற தகவலையும் வெளியிட்டுள்ளது. 

இதனிடையில், மேற்கொள்ளப்படும் கே-4 ஏவுகணையின் சோதனை, அதன் முழு இலக்கான 3,500 கிமி தொலைவிற்கும் உட்படுத்தப்படுமா இல்லை குறைத்து பரிசோதிக்கப்படுமா என்பது குறித்த முடிவை டி.ஆர்.டி.ஓ எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP