வருமான வரி தாக்கல் செய்ய ஜூலை 31 கடைசி நாள்

வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய ஜூலை 31ஆம் தேதி கடைசி நாள் என வருமான வரித்துறை ஆணையர் தெரிவித்துள்ளார்.
 | 

வருமான வரி தாக்கல் செய்ய ஜூலை 31 கடைசி நாள்

வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய ஜூலை 31ஆம் தேதி கடைசி நாள் என வருமான வரித்துறை ஆணையர் தெரிவித்துள்ளார். 

சென்னை ஆயக்கர் பவனில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய, வருமான வரித்துறை ஆணையர் ரெங்கராஜ், வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய, ஜூலை 31ஆம் தேதியே கடைசி நாள் என்றும்,  அதற்கு பிறகு தாக்கல் செய்தால் அபராதம் விதிக்கப்படும் எனவும் தெரிவித்தார். 

ஆண்டு வருமானம் ரூ.5 லட்சத்திற்கும் கீழ் உள்ளோர், ஜூலை 31ஆம் தேதிக்குள் கணக்கு தாக்கல் செய்யவில்லையெனில், ரூ.1000 அபராதம் விதிக்கப்படும் என்றும், டிசம் 31க்குள் தாக்கல் செய்தால் ரூ.5 ஆயிரமும், அடுத்த ஆண்டு மார் 31க்குள் தாக்கல் செய்தால் ரூ.10 ஆயிரமும் அபராதம் விதிக்கப்படும் என தெரிவித்துள்ளார். 

இதேபோல், ரூ.5 லட்சத்திற்கும் மேல் வருமானம் உள்ளோர் ஜூலை 31ஆம் தேதிக்கு தாக்கல் செய்யாவிடில் ரூ. 5000 அபராதம் விதிக்கப்படும் எனவும் அடுத்த ஆண்டு மார்ச் 31ஆம் தேதிக்கு பிறகு, இந்தாண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய முடியாது எனவும் தெரிவித்துள்ளார். மேலும், இணயதளம் மூலம் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளதாகவும் ரெங்கராஜ் குறிப்பிட்டார். 

newstm.in

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP