டெல்லியில் ஜேஎன்யு மாணவர்கள் போராட்டம்

டெல்லியில் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் விடுதி, கல்வி கட்டண உயர்வை கண்டித்து போராட்டம் செய்து வருகின்றனர்.
 | 

டெல்லியில் ஜேஎன்யு மாணவர்கள் போராட்டம்

டெல்லியில் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் விடுதி, கல்வி கட்டண உயர்வை கண்டித்து போராட்டம் செய்து வருகின்றனர்.

விடுதிக்கட்டணம் ரூ.2,500இல் இருந்து ரூ.7000 ஆக உயர்த்தியதற்கு கண்டனம் தெரிவித்து, பல்கலைக்கழகத்தை முற்றுகையிட பேரணியாக சென்ற மாணவர்கள் வளாகத்திற்குள் நுழையவிடாமல் தடுத்து நிறுத்தப்பட்டனர். இதையடுத்து, பல்கலை., வளாகத்திற்கு வெளியே மாணவர்கள் போராட்டம் செய்து வருகின்றனர்.

மாணவர்களின் போராட்டத்தை கட்டுக்குள் கொண்டு வர போலீசார், துணை ராணுவப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP