ஜார்க்கண்ட்: நக்சல் தீவிரவாதிகள் சுட்டுக்கொலை!

ஜார்க்கண்ட் மாநிலம், மாவட்டத்தில், போலீசாருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில், நக்சல் அமைப்பான, ஜார்க்கண்ட் ஜனமுக்தி பரிஷத் அமைப்பைச் சேர்ந்த, மூன்று பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
 | 

ஜார்க்கண்ட் மாநிலத்தில் நக்சல் தீவிரவாதிகளுக்கும், போலீசாருக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். 

சத்தீஸ்கர், ஜார்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் நக்சல்கள் ஆதிக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில், இன்று ஜார்க்கண்ட் மாநிலம் லோகார்தாகா என்ற மாவட்டத்தில் நக்சல்கள் நுழைந்துள்ளதாக போலீசாருக்கு தகவல் வந்ததையடுத்து, அங்கு போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து அங்கு பதுங்கி இருந்த தீவிரவாதிகளுக்கும், போலீசாருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. இதில், 3 நக்சல்  தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இவர்கள் மூவரும் ஜார்க்கண்ட் ஜனமுக்தி பரிஷத் அமைப்பைச் சேர்ந்தவர்கள் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சுட்டுக் கொல்லப்பட்டவரிடம் ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டன. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP