ஜெட் ஏர்வேஸ் விமான சேவை 5ஆக குறைந்தது

நிதி நெருக்கடி காரணமாக 5 ஜெட் ஏர்வேஸ் விமானங்கள் மட்டுமே இயக்கப்பட்டன. அனைத்து வெளிநாட்டு சேவைகளும் ஏற்கனவே ரத்து செய்யப்பட்ட நிலையில் உள்நாட்டு சேவைகளும் முடங்கியுள்ளன.
 | 

சம்பளம் நிலுவையில் உள்ளதால் விமானிகள் பணிக்குத் திரும்ப மறுத்துவிட்டனர். நிலைமையை சமாளிக்க உடனடியாக வங்கிகள், நிதி நிறுவனங்கள் 400 கோடி ரூபாய் கடன் கொடுக்க வேண்டும் என்று ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் கோரியுள்ளது.

இப்பிரச்சினை குறித்து நாளை விவாதிக்க, அனைத்து விமான நிறுவனங்கள், விமான நிலைய அதிகாரிகளுக்கு விமானப் போக்குவரத்து அமைச்சகம் அழைப்பு விடுத்துள்ளது. விமானக் கட்டணத்தை உயர்த்துதல் உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP