ஜெட் ஏர்வேஸ் முன்னாள் தலைவர் நரேஷ் கோயல் மற்றும் அவரது மனைவி வெளிநாடு செல்ல தடை

ஜெட்ஏர்வேஸ் விமான நிறுவன முன்னாள் இயக்குனர் நரேஷ்கோயல் மற்றும் அவரது மனைவி அனிதா கோயல் எமிரேட்ஸ் விமானத்தில் இருந்து இறக்கப்பட்டனர்.
 | 

ஜெட் ஏர்வேஸ் முன்னாள் தலைவர் நரேஷ் கோயல் மற்றும் அவரது மனைவி வெளிநாடு செல்ல தடை

ஜெட்ஏர்வேஸ் விமான நிறுவன முன்னாள் இயக்குனர் நரேஷ்கோயல் மற்றும் அவரது மனைவி அனிதா கோயல் எமிரேட்ஸ் விமானத்தில் இருந்து இறக்கப்பட்டனர்.

ஜெட் ஏர்வேஸ் விமான நிறுவனம் நிதி பற்றாக்குறையால் தடுமாறியது. இதையடுத்து அந்த நிறுவனம் தனது அனைத்து விமான சேவைகளையும் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.

இந்நிலையில் வங்கிகளின் நெருக்கடியால் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் பொறுப்பில் இருந்து நரேஷ் கோயல் விலகினார். நிர்வாக குழு உறுப்பினராக இருந்த அவருடைய மனைவி அனிதா கோயலும் பதவியை ராஜினாமா செய்தார்.

ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் சம்பள பாக்கி வைத்துள்ளதால் அந்நிறுவனத்தின் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் அமைப்பின் தலைவர் கிரண் பவாஸ்கர் கடந்த மாதம் மும்பை போலீஸ் கமி‌ஷனரிடம் ஒரு புகார் மனு அளித்தார்.

அதில், ஊழியர்களுக்கு பல மாதமாக சம்பள பாக்கி வைத்திருக்கும் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் தலைவர், இயக்குனர்கள், நிர்வாக குழு உறுப்பினர்களின் பாஸ்போர்ட்டுகளை முடக்க வேண்டும் என கூறியிருந்தனர்.

இந்நிலையில் நரேஷ் கோயல், தன் மனைவி அனிதா கோயலுடன் நேற்று துபாய் செல்ல எமிரேட்ஸ் நிறுவன விமானத்தில் அமர்ந்திருந்தார்.

அப்போது நரேஷ் கோயலையும், அவருடைய மனைவியையும் குடியுரிமை அதிகாரிகள் வெளிநாடு செல்ல அனுமதி மறுத்ததுடன், அவர்களை விமானத்தை விட்டு கீழே இறக்கினர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP