ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்திற்கு ’நோ பெட்ரோல்’- இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு

ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்திடமிருந்து நிலுவை தொகை வராததையடுத்து அந்நிறுவனத்தின் விமானங்களுக்கான எரிபொருள் வழங்குவதை இந்தியன் ஆயில் நிறுவனம் இன்று முதல் நிறுத்தியுள்ளது.
 | 

ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்திற்கு ’நோ பெட்ரோல்’- இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு

ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்திடமிருந்து நிலுவை தொகை வராததையடுத்து, அந்நிறுவனத்தின் விமானங்களுக்கு எரிபொருள் வழங்குவதை இந்தியன் ஆயில் நிறுவனம் இன்று முதல்நிறுத்தியுள்ளது.

கடும் கடன் நெருக்கடியில் சிக்கி தவிக்கும் ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் அதன் ஊழியர்களுக்கு கடந்த சில மாதங்களாக ஊதியம் வழங்கவில்லை என்று குற்றச்சாட்டு நிலவி வருகிறது.

இதையடுத்த ஜெட் ஏர்வேஸின் விமானிகள் மற்றும் தொழில்நுட்ப பிரிவினர் சங்கம் தங்களுக்கு ஊதியம் வழங்கவில்லையென்றால் வேலை நிறுத்த போரட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்திருந்தனர்.

இதையடுத்து அவர்களுக்கு டிசம்பர் மாத ஊதியம் வழங்கப்படும் என அந்நிறுவனத்தின் நிர்வாகம் அறிவித்தது. இந்நிலையில் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்திற்கு எரிபொருள் வழங்கி வந்த இந்தியன் ஆயில் நிறுவனம் இன்று முதல் எரி‌பொருள் வழங்குவதை நிறுத்தி கொண்டுள்ளது.

ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் இந்தியன் ஆயில் நிறுவனத்திற்கு தர வேண்டிய நிலுவை தொகையை இதுவரை செலுத்தப்படாததையடுத்து , அந்நிறுவனத்துக்கு வழங்கப்பட்டு வந்த எரிபொருள் நிறுத்தப்பட்டுள்ளது என்று அந்நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

newstm.in
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP