ஜம்மு-காஷ்மீர் : பயங்கரவாதிகள் இருவர் சுட்டுக்கொலை

ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் மேற்கொண்ட தேடுதல் வேட்டையின் போது பயங்கரவாதிகள் இருவர் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்களிடமிருந்த ஆயுதங்கள் மற்றும் வெடிப்பொருள்களும் கைப்பற்றப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.
 | 

ஜம்மு-காஷ்மீர் : பயங்கரவாதிகள் இருவர் சுட்டுக்கொலை

ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் மேற்கொண்ட தேடுதல் வேட்டையின் போது பயங்கரவாதிகள் இருவர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்டத்துக்குள்பட்ட சர்சாலி கிராமத்தில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு அவர்கள் வியாழக்கிழமை காலை தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பயங்கரவாதிகள், 
பாதுகாப்புப் படையினரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

பதிலுக்கு பாதுகாப்புப் படையினர் சுட்டதில் பயங்கரவாதிகள் இருவர் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்களிடமிருந்த ஆயுதங்கள் மற்றும் வெடிப்பொருள்களும் கைப்பற்றப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP